- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவரை நம்பி இனி பிரயோசனம் இல்லே, சுதாரித்துக் கொண்ட இயக்குனர் சிறுத்தை சிவா - இப்போ...

அவரை நம்பி இனி பிரயோசனம் இல்லே, சுதாரித்துக் கொண்ட இயக்குனர் சிறுத்தை சிவா – இப்போ யாரோடு படம் பண்ணப் போறார் தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. சிறுத்தை படத்தின் அபார வெற்றியால் பிறகு சிறுத்தை சிவா என்றே அவர் கோலிவுட்டில் அழைக்கப்படுகிறார். அஜீத்குமார் நடித்த வீரம் விவேகம் வேதாளம் விஸ்வாசம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா தான். இந்த படங்கள் அஜீத்குமாருக்கு பெரிய ஹிட் கொடுத்தன.

தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லை. அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா படமும் படுதோல்வியை சந்தித்தது. மேலும் மிக கடுமையான விமர்சனங்களும் அந்த படத்துக்கு கிடைத்தது.

- Advertisement -

கங்குவா படத்துக்கு கிடைத்த மிக மோசமான எதிர்மறை விமர்சனங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டவர் இயக்குனர் சிறுத்தை சிவா தான். கடந்த ஓராண்டுக்கு மேலாக அவருக்கு பட வாய்ப்பு தர எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. எந்த ஹீரோவும் அவரது இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. இது சிறுத்தை சிவாவுக்கு பலத்த ஏமாற்றத்தை வலியை தந்தது.

இந்த சூழலில் நடிகர் அஜீத்குமாரை சந்தித்து சிறுத்தை சிவா பேசினார். தன் மன கவலைகளை அவர் பகிர்ந்துக்கொண்டார். தனது 4 படங்களை இயக்கியவர் என்ற முறையில் சிறுத்தை சிவாவிடம், நாம் இணைந்து ஒரு படம் பண்ணுவோம் என்று அஜீத்குமார் உறுதியளித்த நிலையில், சிறுத்தை சிவா மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார்.

- Advertisement -

ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அஜீத்குமார் நடிப்பில் எந்த ஆர்வமும் இன்றி கார் ரேஸில் மட்டுமே கவனமாக இருந்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் ஏகே 64 படத்தை இயக்குவதாக முதலில் கூறப்பட்ட நிலையில் இப்போது அவர் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை வைத்து படம் இயக்கும் முயற்சிகளில் இறங்கி விட்டார். அதனால் ஏகே 64 படத்தை சிறுத்தை சிவா இயக்குவார் என்று சொல்லப்பட்டது.

கார் ரேஸில் இன்னும் ஓராண்டுக்கு மேல் பிஸியாக இருக்க போகிற அஜீத்குமார் இப்போதைக்கு படத்தில் நடிக்க வர வாய்ப்பில்லை. அதனால் இனியும் ஏகேவை நம்பி பிரயோசனம் இல்லை என தெரிந்துக்கொண்ட இயக்குனர் சிறுத்தை சிவா, நடிகர் தனுஷிடம் நேரில் சந்தித்து கதை சொல்லியிருக்கிறார். அவர் டபுள் ஓகே சொன்ன நிலையில் அடுத்த ஆண்டில் அந்த படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது.

- Advertisement -

சற்று முன்