- Advertisement -
Homeபொழுதுபோக்குமாஜி மாமனார் ரஜினிகாந்த் வழியை பின்பற்றும் நடிகர் தனுஷ் - தலைவர் வழியில் சிஷ்யனும் நடக்கிறாரா?...

மாஜி மாமனார் ரஜினிகாந்த் வழியை பின்பற்றும் நடிகர் தனுஷ் – தலைவர் வழியில் சிஷ்யனும் நடக்கிறாரா? – ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டில் காதல் திருமணம் செய்துக்கொண்டார் நடிகர் தனுஷ். இருதரப்பு பெற்றோர்கள் ரஜினிகாந்த் – கஸ்தூரி ராஜா குடும்பங்களின் பூரண சம்மதத்துடன் இந்த திருமணம் நடந்தது. தனுஷ் ஐஸ்வர்யா தம்பதிக்கு யாத்ரா லிங்கா என 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே தங்களது எக்ஸ் பக்கத்தில் திருமண முறிவு ஏற்பட்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர். பிறகு குடும்ப நல நீதிமன்றத்திலும் இருவருமே விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்தனர். மனம் ஒத்த நிலையில் இருவரும் பிரிவதாக கோரிய நிலையில் அவர்களது கடந்த ஆண்டில் விவாகரத்தும் வழங்கப்பட்டு விட்டது.

- Advertisement -

நடிகர் தனுஷ் திருமண முறிவுக்கு பிறகும் வழக்கம்போல் நடிப்பில் மற்றும் இயக்கத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அதே போல் தனுஷ் ஐஸ்வர்யாவின் பிள்ளைகள் இருவரும் ரஜினி வீட்டிலும் கஸ்தூரி ராஜா வீட்டிலும் மாறி மாறி இருந்து வருகின்றனர். பிள்ளைகளுக்காக தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் சில நிகழ்ச்சிகளில் ஒன்றாகவும் காணப்படுகின்றனர்.

இந்த சூழலில் நடிகர் தனுஷ் ஏற்கனவே 4 படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். சமீபத்தில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் டி55 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கு முன்பு போர்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அவர் நடித்த கர படமும் வெளியானது. இதையடுத்து தமிழரசன் பச்சமுத்து இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

- Advertisement -

அதன்பிறகு இயக்குனர்கள் எச் வினோத் மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்திலும் படங்களில் நடிக்க ஏற்கனவே தனுஷ் கமிட் ஆகி விட்டார். இப்படி பல படங்கள் தனுஷ் லைன் அப்பில் தொடர்ந்து இருந்து வருகின்றன. எனினும் வாரந்தோறும் ஞாயிறு தினங்களில் கதை கேட்பதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். அந்த நாளில் இயக்குனர்கள் தனுஷிடம் வந்து கதை சொல்லி விட்டு செல்கின்றனர்.

நடிகர் ரஜினிகாந்தும் தொடர்ந்து இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு எத்தனை படங்கள், என்னென்ன படங்கள் நடிப்பது என லிஸ்ட் போட்டு ரஜினிகாந்த் கதை கேட்பதாக சொல்லப்படுகிறது. தனது மாஜி மாமனார் பாணியில் மருமகனாக இருந்த தனுஷூம் அதே போல் ஞாயிறு தோறும் கதை கேட்கிறார். மாமனாராக இருந்தாலும் ரஜினியை தலைவா என்றுதான் தனுஷ் குறிப்பிடுவது வழக்கம். தலைவர் பாணியில் சிஷ்யனும் செல்கிறாரா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்