- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரதீப் ரங்கநாதன் நடித்த படத்துக்கு இப்படி ஒரு பிரச்னையா? என்ன கொடும சார் இது -...

பிரதீப் ரங்கநாதன் நடித்த படத்துக்கு இப்படி ஒரு பிரச்னையா? என்ன கொடும சார் இது – புலம்பும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். லவ்டுடே மற்றும் டிராகன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வெற்றி பெற்றார். லவ்டுடே படத்தை அவரே இயக்கி இருந்தார். டிராகன் படத்தை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்திருந்தார். இந்த 2 படங்களுமே 100 கோடி ரூபாய் வசூலை கடந்த மாஸ் ஹிட் படங்களாக இருந்தன.

இப்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் எல்ஐகே. இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நாம் தமிழர் கட்சி சீமான் நடித்திருக்கிறார். கோமாளி லவ்டுடே டிராகன் படங்களின் வரிசையில் எல்ஐகே படமும் மாபெரும் ஹிட் கொடுக்கும் என்று கோலிவுட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஆனால் இந்த படம் இப்போது ஆந்திராவில் ரிலீஸ் ஆவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி. இவர் தெலுங்கு படங்களில் டான்ஸ் மாஸ்டராக இருந்து வருகிறது. தமிழ் இந்தி என பிறமொழி படங்களுக்கும் ஜானி மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்து வந்தார். ஜெயிலர் படத்தில் தமன்னா குத்தாட்டம் போட்ட காவலய்யா பாடலின் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்தாண்டில் ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார் எழுந்தது. அவரிடம் உதவி நடன இயக்குனராக பணிபுரிந்த ஒரு பெண்மணி, ஜானி மாஸ்டர் தன்னை 14 வயதில் இருந்தே பாலியல் தொந்தரவு செய்ததாக ஆந்திரா போலீசில் புகார் அளித்தார். இதனால் ஜானி மாஸ்டர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். ஒரு மாதம் சிறையில் இருந்த அவர் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.

- Advertisement -

இந்த விவகாரம் காரணமாக, தமிழில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்ட ஜானி மாஸ்டருக்கு அந்த விருதும் வழங்கப்படாமல் ரத்து செய்யப்பட்டது. மேலும் ஆந்திரா சினிமாத்துறை, ஜானி மாஸ்டருக்கு ரெட்கார்டு போட்டு அவரை எந்த படத்திலும் பணிபுரிய அனுமதி இல்லை என்று அறிவித்துவிட்டது.

ஆனால் பாலியல் புகாரில் சிக்குவதற்கு முன்பே நடன இயக்குனர் ஜானி மாஸ்டர், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்ஐகே படத்தில் ஒரு பாடலுக்கு கொடியாகிராபி செய்திருக்கிறார். இப்போது அந்த பாடல் காட்சியுடன் எல்ஐகே படம் ஆந்திராவில் ரிலீஸ் செய்யக்கூடாது என்ற ஒரு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்படி நடன இயக்குனரே ஒரு படத்துக்கு பிரச்னையாக மாறி விட்டாரே என்று படக்குழுவினர் புலம்புகின்றனர். அதே நேரத்தில் பிரச்னைக்கு முன்பு எடுக்கப்பட்ட பாடல் காட்சியை அனுமதிப்பதில் என்ன தவறு என்றும் ஆந்திரா திரைத்துறையிடம் படக்குழுவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்