- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவ்வளவுதான் இனி ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாது, வரும் 18ம் தேதி கேவிஎன் புரடக்சன்ஸ் செய்யப்...

அவ்வளவுதான் இனி ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாது, வரும் 18ம் தேதி கேவிஎன் புரடக்சன்ஸ் செய்யப் போகும் அந்த விஷயம் – விரக்தியில் தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன். இயக்குனர் எச் வினோத் இந்த படத்தை டைரக்ட் செய்திருந்தார். கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட இந்த படம் 5 மாதங்கள் கடந்தும் இன்னும் திரைக்கு வரவில்லை.

சென்சார் சான்றிதழ் தரப்படாமல் முடங்கிய இந்த படத்தை திரைக்கு கொண்டு வர கேவிஎன் புரடக்சன்ஸ் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டும் போராடியும் இந்த படம் திரைக்கு வருவதற்கான அறிகுறியே இல்லை. முதல்வரான பிறகு விஜயும் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கான எந்த ஆர்வமோ அக்கறையோ காட்டியதாக தெரியவில்லை.

- Advertisement -

எப்படியும் வருகிற 18ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகி விடும். ஏனென்றால் முதல்வர் விஜயின் பிறந்த நாள் வருகிற 22ம் தேதி என்பதால் ஜனநாயகன் திரைக்கு வரும் என்று ரசிகர்கள் தவெக கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த படம் ரிலீஸ் குறித்த முயற்சிகளை தயாரிப்பு நிறுவனமே சமீபகாலமாக கைவிட்டு விட்டதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் ஜனநாயகன் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் அவர்கள் கொடுத்த தொகையை வட்டியுடன் திருப்பித் தருமாறு கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனத்திடம் கேட்டுள்ளனர். இந்த சூழலில் கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரித்த பாலன் என்ற படம் வருகிற 19ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை மஞ்சும்மெல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரம் டைரக்ட் செய்திருக்கிறார்.

- Advertisement -

பாலன் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ள நிலையில், கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் ஜனநாயகன் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு பணத்தை வட்டியுடன் திருப்பித் தராமல் இந்த படத்தை தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய முடியாது. அதனால் இந்த படத்தை அந்த நிறுவனம் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு கைமாற்றி விட்டுவிட்டது.

மேலும் ஜனநாயகன் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு வருகிற 18ம் தேதி வட்டியுடன் அந்த தொகையை அனைவருக்கும் செட்டில் செய்வதாகவும் கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. அதனால் 19ம் தேதி வெளியாக உள்ள பாலன் படத்தை வினியோகஸ்தர்கள் எந்த தொந்தரவும் செய்யக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. அதனால் ஜனநாயகன் படம் அவ்வளவுதான். இனி ரிலீஸ் ஆகாது என்று கோலிவுட்டில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்