தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பா ரஞ்சித் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான “அட்டக்கத்தி” படத்தின் மூலம் தமிழ் திரையுவதற்கு இயக்குனராக அறிமுகமானார். அவரது அந்த படத்தில் கதாநாயகராக நடித்தவர் அட்டகத்தி தினேஷ். அந்த படத்தின் பிரம்மாண்டமான வெற்றி காரணமாக அவரது பெயரானது அட்டக்கத்தி தினேஷ் என்றே மாறியது.

அதன்பிறகு மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என அடுத்தடுத்த வெற்றி படங்களால் ரசிகர்கள் கொண்டாடும் இயக்குனராகவும் பா.ரஞ்சித் மாறினார். அதேபோன்று விசாரணை, குக்கூ, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், திருடன் போலீஸ், இரண்டாம் உலகப் போரின் கடைசி கொண்டு என பல்வேறு திரைப்படங்களில் அட்டகத்தி தினேஷ் நடித்துள்ளார்.
இப்படி பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் தினேஷ் நடித்து தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வரும் வேளையில் சமீபத்தில் அவருக்கு பெரிய வெற்றிப்படங்கள் எதுவும் அமையவில்லை. ஒவ்வொரு படத்திலும் இப்படி வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கும் தினேஷை தற்போது மீண்டும் அட்டகத்தி படத்தின் இயக்குனரான பா. ரஞ்சித் இயக்க இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவலின் மூலம் மீண்டும் தினேஷிற்கு இந்த படம் அவரது கரியரில் ஒரு முக்கிய திருப்பத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக ரசிகர்களும் இந்த படத்திற்கான அறிவிப்பு எப்போது அதிகாரபூர்வமாக வெளியாகும் என காத்திருக்கின்றனர்.
இவர்கள் இருவரும் ஏற்கனவே அட்டகத்தி படத்தில் எதார்த்தமான ஒரு கல்லூரி மாணவனின் வாழ்க்கையை தத்ரூபமாக வெளிக்காட்டியிருந்த வேளையில் இம்முறை வித்தியாசமான கெட்டப்புடன் தினேஷ் தயாராகி வரும் இந்த படத்தின் கதை எவ்வாறு இருக்கப் போகிறது? என்பது குறித்து எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





