- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்க செஞ்ச நல்லதை எல்லாம் ஒரே வார்த்தையில் காலி பண்ணிட்டீங்க, மக்கள் கிட்ட மன்னிப்பு கேளுங்க...

நீங்க செஞ்ச நல்லதை எல்லாம் ஒரே வார்த்தையில் காலி பண்ணிட்டீங்க, மக்கள் கிட்ட மன்னிப்பு கேளுங்க – நடிகர் தாடி பாலாஜி அட்வைஸ்!

- Advertisement -

நடிகர் மற்றும் நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் மிக விரைவில் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். தனது ரசிகர்கள் கூட்டத்தில் தன்னுடைய அம்மா முன்னிலையில் அதை அதிகாரபூர்வமாக அறிவிப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் நான் அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என்றும் ரசிகர்களிடம் அவர் கருத்தும் கேட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ராகவா லாரன்ஸ், தெருநாய்களுக்கு பிஸ்கட் பிடிக்குமா, பிரியாணி பிடிக்குமா என்று தெரியாது. கத்துகிற நாய்களுக்கு பிடித்ததை செய்து கொடுத்து கத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதுபோல் மக்களுக்கு என்ன தேவை என்பதை தெரிந்துக்கொள்ள புதிய தவெக அரசுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று பேசியிருந்தார். தெருநாய்களுடன் பொதுமக்களை ஒப்பிட்டு பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ்க்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில், காமெடி நடிகர் தாடி பாலாஜி அதுகுறித்து ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார்.

அதில் நடிகர் தாடி பாலாஜி கூறியதாவது, என்னுடைய ஆதரவு ராகவா லாரன்ஸ் மாஸ்டருக்கு தான் என்ற சொன்ன மக்களை எல்லாம் சில வார்த்தைகளால் அவர் வருத்தமடைய செய்துவிட்டார். நாய்கள் என்கிறார். பிஸ்கட் போட்ட நாய் சும்மா இருக்கும். சில நாய்கள் பிரியாணி போட்டால் சும்மா இருக்கும் என்கிறார். இதெல்லாம் ஒரு வார்த்தையா?

- Advertisement -

அரசியலுக்கு வருகிற முடிவு எடுத்த நீங்கள் வார்த்தைகளை எவ்வளவு கவனமாக பயன்படுத்த வேண்டும்? நீங்க உதவிகள் செய்றீங்க. நீங்க ஆன்மீகவாதி. இவ்வளவு தெரிஞ்ச நீங்க ஒரு பொதுவெளியில் இப்படி பேசலாமா? இது மிகப்பெரிய தவறு. மக்களை எப்படி நீங்க நாய்கள்ன்னு சொல்வீங்க?

நீங்க இப்படி பேசினால் உங்களை கட்சியில் சேர்க்கறவங்களுக்கும் பாதிப்பு வரும். இனிமேல் வார்த்தைகளை பார்த்து கவனமா பயன்படுத்துங்க. மக்களோடு மக்களாக கேட்கிறேன். நீங்க பேசுன வார்த்தைக்கு மன்னிப்பு கேட்கணும். மன்னிப்பு கேட்பீங்கன்னு நம்பறேன் என்று அந்த வீடியோவில் நடிகர் தாடி பாலாஜி பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்