- Advertisement -
Homeபொழுதுபோக்குடிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் டிரைலரை பார்த்து பொங்கி எழுந்த சிம்பு... மேடையில் கலகல பேச்சு......

டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் டிரைலரை பார்த்து பொங்கி எழுந்த சிம்பு… மேடையில் கலகல பேச்சு… கௌதம் மேனன் ஃபேன்ஸ் ஹேப்பி அண்ணாச்சி…

- Advertisement -

சந்தானம் தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதனை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இயக்குனர்களான செல்வராகவன் மற்றும் கௌதம் மேனன் இருவரும் படத்தில் நடித்துள்ளனர். வழக்கம்போல் நகைச்சுவை கலந்த ஹாரர் திரைப்படமாக இது எடுக்கப்பட்டுள்ளது.

இதன் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மொட்டை ராஜேந்திரனுடன் இணைந்து வழக்கம்போல் காமெடியில் பின்னி எடுத்திருக்கிறார் சந்தானம். நடிகர் ஆர்யா இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். வரும் 16ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இது தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிம்பு பங்கேற்றார். தொடர்ந்து பேசிய அவர், நான் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் டிரைலரை பார்த்தேன். அனைத்தும் நன்றாக உள்ளது. ஆனால் எங்கள் இயக்குனர் கௌதம் மேனனை நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அதை மட்டும் நான் சும்மா விடவே மாட்டேன் என்று கலகலப்பாக கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், நானும் சந்தானமும் எனது 49வது திரைப்படத்தில் இணைந்து நடிக்கிறோம். சமீப நாட்களாகவே நகைச்சுவை திரைப்படங்கள் குறைந்துவிட்டன. ஆக்சன் திரைப்படங்கள் அதிகரித்துவிட்டன. டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை பார்த்தேன். அது நன்றாக இருந்தது.

இது போன்ற மகிழ்ச்சியான படங்கள் வரவேண்டும். அதற்கு நமக்கு சந்தானம் வேண்டும். நான் அழைத்தால் சந்தானம் வருவார் என்று எனக்கு தெரியும். இது போன்ற படங்களில் நடிப்பதற்கு, எனது 49 வது திரைப்படம் சந்தானத்திற்கு ஒரு ஆரம்ப புள்ளியாக இருக்கும்.

இங்கு எப்போதுமே எதிர்பார்க்காமல் உதவுங்கள். ஒரு சிலர் அந்த உதவியை நினைத்து அதற்கு மரியாதை செய்வார்கள். சிலர் அந்த உதவியை நினைத்து பார்க்காமல் ஏறி மிதித்து போய்க் கொண்டே இருப்பார்கள் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் சிம்பு பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சற்று முன்