- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்குவா படம் தந்த படுமோசமான ரிசல்ட்; பாலிவுட்டில் முக்கிய படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த நடிகர்...

கங்குவா படம் தந்த படுமோசமான ரிசல்ட்; பாலிவுட்டில் முக்கிய படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த நடிகர் சூர்யா – கங்குவா இந்தியிலும் ஆப்பு வைத்துவிட்டதா?

- Advertisement -

ஒரு திரைப்படத்தின் வெற்றியை படம் பார்க்கும் ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமோ, படத்தில் நடித்த நடிகரோ, படத்தை இயக்கிய இயக்குனரோ, இசையமைத்த இசையமைப்பாளரோ முடிவு செய்ய முடியாது. ஒரு படைப்பு சிறப்பாக இருந்தால் நிச்சயமாக அதை மக்கள் வரவேற்றுக் கொண்டாடுவார்கள்.

அங்கே நடிகர்கள், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் யாருமே முக்கியமல்ல. படம்தான் முக்கியம். படம்தான் ரசிகர்களிடம் பேசும். அந்த படைப்புதான் ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்து அந்த படத்துக்கு வெற்றியைத் தேடிக் கொடுக்கும். அதற்கு சமீபத்திய உதாரணமாக அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய லப்பர் பந்து படத்தை சொல்லலாம்.

- Advertisement -

சுமார் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம், ரூ. 35 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியது. இன்னும் இந்த படத்தை ஓடிடி தளத்தில் ரசிகர்கள் திரும்பத் திரும்ப பார்த்து ரசிக்கின்றனர். இதற்கும் இது மிக சாதாரணமான கதைதான். கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட யதார்த்தமான கதைக்களம் தான். ஆனால் அது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனதால் இப்போதும் அந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் சூர்யா நடித்த கங்குவா படம் கடந்த 14ம் தேதி வெளியானது. இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று படக்குழுவினர் தம்பட்டம் அடித்தனர். எல்லோரும் வாயை பிளந்து கொண்டு பார்ப்பார்கள், படம் நெருப்பு மாதிரி இருக்கும் என்றார் சூர்யா. கங்குவா 2000 கோடி ரூபாய் வசூலிக்கும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறினார். ஆனால் படம் வெளியான முதல் நாள் முதல் காட்சியிலேயே ரசிகர்கள் காதை பொத்திக்கொண்டு தியேட்டரை விட்டு கதறிக்கொண்டு ஓடி வந்தனர். படம் பார்த்தவர்கள் இந்தியன் 2 படத்தை விட மோசமான படம் என்று விமர்சித்தனர்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில், மகாபாரத கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கும் கர்ணா என்ற இந்தி படத்தில் நடிக்க சூர்யா கமிட்டாகி இருந்தார். இதில் அவர் கர்ணன் கேரக்டரில் நடிக்கவும், ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இந்த படத்தை டைரக்ட் செய்யவும், திரௌபதியாக ஜான்வி கபூர் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த படத்தில் முதன்முறையாக சூர்யாவுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிப்பதால், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. கர்ணா படத்தை 2 பாகங்களாக 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க படக்குழு திட்டமிட்டு இருந்தது.

இந்நிலையில் கங்குவா படத்துக்கு கிடைத்த படுமோசமான விமர்சனங்கள் காரணமாக கர்ணா படத்தை படக்குழு கைவிட்டு விட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதிகப்படியான பட்ஜெட்டில் இந்த படத்தை உருவாக்க திட்டமிட்ட படக்குழு, கங்குவா படத்துக்கு கிடைத்த ரிசல்ட் காரணமாகவே இந்த புராஜெக்ட்டை கைவிட்டதாகவும் தெரியவந்துள்ளது. இன்னும் சில தினங்களில் இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்