- Advertisement -
Homeபொழுதுபோக்குடாஸ்மாக் கடைகளை காலை 7 மணிக்கே திறங்க, எண்ணிக்கையை அதிகப்படுத்துங்க - படவிழாவில் விவகாரமாக பேசிய...

டாஸ்மாக் கடைகளை காலை 7 மணிக்கே திறங்க, எண்ணிக்கையை அதிகப்படுத்துங்க – படவிழாவில் விவகாரமாக பேசிய நடிகர் கஞ்சா கருப்பு!

- Advertisement -

கவிதாலயா சரவணன் கிரியேஷன் சார்பில் இயக்குனர் ராம்தேவ் இயக்கத்தில் உருவான படம் மக்கள் தலைவா. இந்த படத்தில் நடிகர் ரவி மரியா கதையின் நாயகனாக முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார். மக்கள் தலைவா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் கஞ்சா கருப்பு விவகாரமாக பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் கஞ்சா கருப்பு பேசியதாவது, இந்த படத்தின் இயக்குனர் ராம்தேவுக்கு ஒரு தேவை என்றால் அதிகாலை 3 மணிக்கு கூட போன் செய்து பேசுவார். ஒரு நாள் அதிகாலை 4 மணிக்கு படப்பிடிப்புக்கு என்னை வரச் சொன்னார். நானும் காலை 4 மணிக்கு அவர் சொன்ன ஒயின்ஷாப்புக்கு சென்றேன். கதவு மூடி இருந்தது. யாரும் அங்கு இல்லை.

- Advertisement -

நான் சென்று ஒயின்ஷாப் கடை கதவை தட்டியதும் உள்ளே இருந்து ஒருவர் எட்டிப் பார்த்தார். அவர் இன்று பிளாக்கில் சரக்கு கிடைக்காது என்றார். அவரிடம் நான் சரக்கு வாங்க வரவில்லை. படத்தில் நடிக்க வந்திருக்கிறேன். இயக்குனர் இங்கு தான் என்னை வரச் சொன்னார் என்றேன். அதன் பிறகு புரொடெக்சன் நபர் எனக்கு போன் செய்து வந்துவிடுகிறேன் என்றார்.

இன்னொரு முக்கியமான விஷயம், தற்போது இரவு 9.45 மணிக்கு கடைகளை முழுமையாக மூடி விடுகிறார்கள். இந்த ஆட்சியில் மதுக்கடைகளை இரவு 12 மணி வரை திறந்திருக்க அனுமதிக்க வேண்டும். அதேபோல் காலையில் 7 மணிக்கு கடைகளை திறந்து விட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஆங்காங்கே ஒயின் ஷாப்புகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

- Advertisement -

எனவே டாஸ்மாக் கடைகளில் எண்ணிக்கையை இன்னும் கொஞ்சம் அதிகமாக வேண்டும் என்று நடிகர் கஞ்சா கருப்பு பேசியிருக்கிறார். நடிகர் விஜய் தமிழக முதல்வராக பங்கேற்றவுடன் அவர் எடுத்த ஆரம்பகட்ட முதல் நடவடிக்கையே கோவில்கள் மற்றும் பள்ளிகள் அருகில் இருக்கும் 717 டாஸ்மாக் கடைகளை மூடியதுதான்.

அவரது இந்த அதிரடி நடவடிக்கைக்கு தமிழக மக்கள் மத்தியில் வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது. இந்த நிலையில் நடிகர் கஞ்சா கருப்பு டாஸ்மாக் கடைகளை காலை 7 மணிக்கு திறக்க வேண்டும். இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறந்து இருக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பேசியிருப்பது இணையத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது.

- Advertisement -

சற்று முன்