- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது மகளை வைத்து புதிய களத்தில் இறங்கும் வனிதா விஜயகுமார்... ரசிகர்கள் கூறுவது என்ன?...

தனது மகளை வைத்து புதிய களத்தில் இறங்கும் வனிதா விஜயகுமார்… ரசிகர்கள் கூறுவது என்ன?…

- Advertisement -

கோலிவுட்டில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத நடிகை யார் என்றால் அது நிச்சயம் வனிதா விஜயகுமாராகத்தான் இருக்கும். நடிகை செல்லும் இடங்களில் எல்லாம் சர்ச்சை தீயாக பற்றிக்கொள்ள, அது இணையத்தில் வேகமாக பரவி அன்றைய தினத்தில் பேசு பொருளாகும். எந்த ஒரு விஷயத்தையும் நேருக்கு நேராக பேசி மல்லுக்கட்டும் வனிதா, தனது தந்தை விஜயகுமாரையும் விட்டு வைக்கவில்லை.

சொத்து பிரச்சனையில் தனது தந்தைக்கு எதிராக திரும்பிய அவர், பல்வேறு புகார்களை அடுக்கினார். இது தொடர்பாக அவர் செய்தி தொலைக்காட்சிகளில் அளித்த பேட்டி, அன்றைய தேதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் விஜய்யின் சந்திரலேகா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் திரைப்படம் வெற்றிகரமாக ஓடவில்லை என்றாலும், அதில் இடம்பெற்ற அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் பாடல், நல்ல வரவேற்பை பெற்று வனிதாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இதன் பின்னர், ராஜ்கிரணுடன் மாணிக்கம் படத்தில் நடித்தார் வனிதா.

இதன்பிறகு, திரையுலக வாழ்வில் இருந்து ஒதுங்கிய அவர் திருமண உலகில் கால் எடுத்து வைத்தார். அதன்படி 2000-ம் ஆண்டில் ஆகாஷ் என்பவர் உடன் வனிதாவுக்கு திருமணம் ஜோராக நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு, ஒரு மகன், மகள் பிறக்க கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்தனர்.

இதைத்தொடர்ந்து ராஜன் என்பவருடன் திருமணம் முடிக்க, இந்த உறவும் சில நாட்களில் கசந்து போனது. இது ஒரு பக்கம் இருக்க, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று புகழ்பெற்றார் வனிதா விஜயகுமார். நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிசோட்டிலும் புதுப்புது விதமான உணவுகளை அறிமுகப்படுத்தி, நடுவர்களையே அசரவைத்த வனிதா, இறுதிப் போட்டியில் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இதனிடையே பீட்டர் பால் என்பவர் உடன், வனிதா 2020 ஆம் ஆண்டில் திருமணம் முடிக்க, அதே வருடத்தில் அவர்களின் உறவு முறிந்து போனது. சமீபத்தில் உடல் நலக்குறைவால் பீட்டர் பால் இறந்து போனார். தற்போது வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்து வரும் வனிதா, யூடியூப் சேனலில் சமையல் செய்தும் வருமானம் ஈட்டி வருகிறார். இந்த நிலையில் தனது 18 வயது மகள் ஜோவிகாவை சினிமாவில் அறிமுகம் செய்து வைக்க தயாராகி வருகிறார். கதாநாயகன் யார் என்பதுடன், தனது மகளுக்கு நல்ல கதாபாத்திரம் உள்ள கதையிலேயே அறிமுகம் செய்ய திட்டமிட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் வனிதா மகள் திரையுலகில் அறிமுகம் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்