- Advertisement -
Homeபொழுதுபோக்குசேயோன் படம் பொங்கலுக்கு இல்லே, நடிகர் சூர்யாவுடன் மோதலை தவிர்த்த நடிகர் சிவகார்த்திகேயன் - ஆனா...

சேயோன் படம் பொங்கலுக்கு இல்லே, நடிகர் சூர்யாவுடன் மோதலை தவிர்த்த நடிகர் சிவகார்த்திகேயன் – ஆனா கென் கருணாஸ் படத்துக்கு சிக்கல் வந்துடுச்சே?

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது சேயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தாய்கிழவி பட இயக்குனர் சிவக்குமார் முருகேசன் டைரக்ட் செய்து வருகிறார். தாய்கிழவி படமாக்கப்பட்ட தேனி மாவட்டம் உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார். வருகிற தீபாவளிக்கு சேயோன் படத்தை ரிலீஸ் செய்ய சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தீபாவளிக்கு நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அதனால் ரஜினி படத்துடன் மோத விரும்பாத நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டார். ஆனால் பொங்கலுக்கு மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ரிலீஸாக உள்ளது. அதனால் சூர்யா படத்துடன் சேயோன் மோதும் சூழல் உருவானது.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் ரிலீஸ் என்ற நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படமும் ரிலீஸ் என அறிவிப்பு வெளியானதால், தளபதியுடன் மோதும் அளவுக்கு சிவகார்த்திகேயனுக்கு துணிச்சல் வந்துவிட்டதா? என விஜய் ரசிகர்கள் கொந்தளித்தது குறிப்பிடத்தக்கது.

அதனால் சூர்யா படம் ரிலீஸ் நேரத்தில் தனது படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனால் சூர்யா ரசிகர்களும் இதே போல் கொந்தளித்து விடுவார்கள் என்பதை புரிந்துக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், இப்போது சேயோன் படம் ரிலீசை பொங்கலுக்கு முன்பே தீர்மானித்து விட்டார். அதனால் சேயோன் படம் வருகிற டிசம்பர் கடைசியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

ஆனால் சிவகார்த்திகேயனின் இந்த முடிவு நடிகர் கென் கருணாஸ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனுக்கு சிக்கலை தந்துள்ளது. ஏனெனில் கென் கருணாஸ் நடிக்கும் ராஜன் வகையறா என்ற படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகை ரிலீஸ் என அவர்கள் திட்டமிட்ட நிலையில் சேயோன் கிறிஸ்துமஸ் ரிலீஸ் என்பதால், ராஜன் வகையறா ரிலீஸ் தள்ளிப் போகும் என்று தெரிய வந்துள்ளது.

சற்று முன்