- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் வெற்றிக்கு பின்னால்… அயலான் படம் ரிலீஸ்க்கு பிறகு சிவகார்த்திகேயன் போட்ட வைரல் பதிவு -...

என் வெற்றிக்கு பின்னால்… அயலான் படம் ரிலீஸ்க்கு பிறகு சிவகார்த்திகேயன் போட்ட வைரல் பதிவு – இவரு எதை சொல்ல வர்றாருன்னு புரியலையே?

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று அயலான் படம் வெளியானது. முதல் நாளான நேற்றும், இன்னும் பாசிட்டாவான ரிசல்ட்தான் வந்துள்ளது. அதனால் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியில் இருக்கிறார். 6 ஆண்டுகள் கழித்து இந்த படம் வெளிவந்தாலும், இன்றைய சூழலில் ரசிகர்கள் ரசிக்கும்படி படம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், விஜய் டிவியில் அது இது எது என்ற காமெடி ஷோ மூலம், பார்வையாளர்கள் மத்தியில் அறிமுகமானவர். தொடர்ந்து விருது விழாக்கள், மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். கல்லூரி விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் ரஜினி, சாலமன் பாப்பையா, விஜயகாந்த் போல மிமிக்ரி செய்து மக்களை சிரிக்க வைத்தவர்.

- Advertisement -

ஆனால் சில படங்களில் நடித்த பின்னால், அவர் பலருக்கும் மிக மிக பிடித்தமானவராக மாறிவிட்டார். தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக பலரும் பார்க்கத் துவங்கினர். இளைஞர்கள் பலரும் அவரை ப்ரோ என அழைத்தனர். நடிகை சரிதா, இயக்குநர் மிஷ்கின் போன்றவர்கள், மாவீரன் பட விழாவில் சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு ரஜினி எனப் புகழ்ந்தனர்.

அப்படிப்பட்ட சிவகார்த்திகேயனுக்கு திடீரென ஏற்பட்ட இமான் சார்ந்த பிரச்னை மிகப்பெரிய பின்னடவை தந்தது. அதுபற்றி சிவகார்த்திகேயன் மவுனம் காத்த நிலையில், இன்னும் விமர்சனங்கள் பலமடங்கு அதிகரித்தது. இனி சினிமாவில் அவரது எதிர்காலம் அவ்வளவுதான் என மூத்த சினிமா பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள் அச்சம் தெரிவித்து பேசினர்.

- Advertisement -

ஆனால் அப்படிப்பட்ட பிரச்னைகளுக்கான எந்தவிதமான அடையாளங்களும் இல்லாமல், அயலான் படத்துக்கு முதல்நாளே நல்ல ஓப்பனிங் கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் சம்பளமே வாங்கவில்லை என்பதும், இந்த படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்பதற்காக ரூ. 30 கோடி வரை, தனது சொந்த பணத்தை தயாரிப்பாளருக்காக கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அயலான் படம் ரிலீஸ் ஆகி மக்களின் வரவேற்பு கிடைத்த பிறகு சிவகார்த்திகேயன், தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை செய்திருக்கிறார். அதில், வெற்றி பெறும் ஒவ்வொரு மனிதனின் பின்னாலும் ஒரு வலி மிகுந்த கதை இருக்கும். அந்த வலிமிகுந்த கதை ஒரு வெற்றிக்கரமான முடிவைத் தரும். அந்த வலியை ஏற்றுக்கொண்டு வெற்றிக்கு தயாராகுங்கள், என்று குறிப்பிட்டிருக்கிறார். இது அவருக்கே சொல்கிறாரா, அல்லது படக்குழுவினருக்கு சொல்கிறாரா, அல்லது ரசிகர்களுக்கு சொல்கிறாரா என்பதுதான் தெரியவில்லை.

- Advertisement -

சற்று முன்