- Advertisement -
Homeபொழுதுபோக்குஹபீபி படத்தில் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் நடிப்பு எப்படி? ஓபனாக விமர்சனம் செய்த மகன் நடிகர்...

ஹபீபி படத்தில் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் நடிப்பு எப்படி? ஓபனாக விமர்சனம் செய்த மகன் நடிகர் தனுஷ்!

- Advertisement -

ஆரம்பத்தில் நடிகர் விசு போன்றவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் கஸ்தூரி ராஜா. பிறகு அவர் பல கிராமிய படங்களை இயக்கிய ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றார். குறிப்பாக கஸ்தூரி ராஜா இயக்கிய படங்கள் கடந்த 1980 90களில் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த மாஸ் ஹிட் கிராமத்து படங்களாக இருந்தன.

எட்டுப்பட்டி ராசா வீரத்தாலாட்டு துள்ளுவதோ இளமை என் ஆச ராசாவே கும்மிப்பாட்டு கரிசக்காட்டு பூவே என் ராசாவின் மனசிலே சோலையம்மா தாய் மனசு நாட்டுப்புற பாட்டு வீரம் வெளஞ்ச மண்ணு ஆத்தா உன் கோவிலிலே உள்ளிட்ட பல மாஸ் ஹிட் படங்களை இயக்கியவர் கஸ்தூரிராஜா.

- Advertisement -

அவரது மகன்கள் செல்வராகவன் இயக்குனர் மற்றும் நடிகர். தனுஷ் நடிகர் மற்றும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இப்போது இயக்குனர் கஸ்தூரி ராஜாவும் நடிக்க வந்து விட்டார். சமீபத்தில் திரைக்கு வந்த ஹபீபி என்ற படத்தில் மிகவும் முக்கியமான கேரக்டரில் இயக்குனர் கஸ்தூரி ராஜா நடித்திருக்கிறார்.

இயக்குனர் மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா ஈசா மாளவிகா மனோஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ஹபீபி படம் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இஸ்லாமியர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் தனுஷ் ஹபீபி படக்குழுவை பாராட்டி இருக்கிறார். இதுகுறித்து நடிகர் தனுஷ் கூறியதாவது, தொடர்ச்சியான படப்பிடிப்பு காரணமாக ஹபீபி படத்தை தாமதமாக இன்றுதான் பார்த்தேன். நான் அறிந்திடாத முற்றிலும் புதிய உலகத்துக்குள் நுழைந்து யூசூப் கேரக்டராகவே முழுமையாக வாழ்ந்திருக்கும் என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்.

அப்பாவிடம் இருந்தும் மற்ற நடிகர்கள் அனைவரிடமிருந்தும் மிகச் சிறப்பான நடிப்பை வாங்கியதோடு மிகச் சிறந்த திரைப்பட அனுபவத்தை தந்திருக்கும் இயக்குனர் மீனா மீரா கதிரவன் மற்றும் வாழ்த்துகள் என்று நடிகர் தனுஷ் பாராட்டி இருக்கிறார். இனி தனுஷ் இயக்கும் படங்களில் தனது தந்தை கஸ்தூரி ராஜாவுக்கும் கேரக்டர் தர வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்