- Advertisement -
Homeபொழுதுபோக்குசமூக வலைதளங்களில் இருந்து விலகுகிறேன் - திடீரென அறிவித்த டிராகன் பட நடிகை - அப்செட்...

சமூக வலைதளங்களில் இருந்து விலகுகிறேன் – திடீரென அறிவித்த டிராகன் பட நடிகை – அப்செட் ஆன ரசிகர்கள்!

- Advertisement -

கன்னட சினிமாவில் முகில்பேட்டை என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கயாடு லோஹர். அதன் பிறகு மலையாளம் தெலுங்கு தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் அவர் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தில் கயாடு லோஹர் அறிமுகமானார்.

தமிழில் வெளியான முதல் படத்திலேயே அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி கயாடு லோஹர் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றார். அதைத் தொடர்ந்து மலையாளத்தில் டோவினோ தாமஸ் உடன் இணைந்து கயாடு லோஹர் நடித்த படம் பள்ளிச்சட்டம்பி. இந்தப்படமும் அவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது.

- Advertisement -

இப்போது இயக்குனர் மாரி செல்வராஜ் டைரக்ட் செய்ய உள்ள ஒரு புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கயாடு லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் நடிகை கயாடு லோஹர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, சமூக ஊடகங்களில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கிறேன். சில நேரங்களில் உடலுக்கு ஓய்வு தேவைப்படுவது போல மனதிற்கும் ஓய்வு அவசியம்.

வாழ்க்கையின் வேகத்தை சற்று குறைத்து திரைக்கு அப்பால் உள்ள நிஜ வாழ்க்கையுடனும் என்னுடனும் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன் என்று அந்த பதிவில் கயாடு லோஹர் தெரிவித்துள்ளார். மேலும் தனது பதிவில் கயாடு லோஹர் கூறுகையில், எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து அன்பையும் ஊக்கத்தையும் வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் வாழ்த்துகளும் எனக்கு மிகவும் மதிப்பு மிக்கவை.

- Advertisement -

நான் சிறிது காலம் சமூக ஊடகங்களில் இருக்க மாட்டேன். இருப்பினும் முக்கிய தகவல்கள் ஏதேனும் இருந்தால் எனது குழுவினர் இந்த கணக்கின் மூலம் பகிர்வார்கள். அனைவருக்கும் அமைதியும் மகிழ்ச்சியும் அன்பும் கிடைக்கட்டும். விரைவில் மீண்டும் சந்திப்போம் என்று அவர் கூறியிருக்கிறார்.

நடிகை கயாடு லோஹரின் இந்த பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவர் மீண்டும் சமூக ஊடகங்களுக்கு திரும்ப வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் திடீரென அவர் சோஷியல் மீடியாவை விட்டு வெளியே போக என்ன காரணம் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்