- Advertisement -
Homeபொழுதுபோக்குசிம்பு 51 படம் குறித்த முக்கிய தகவலை அப்டேட் செய்த டிராகன் பட இயக்குனர் அஸ்வத்...

சிம்பு 51 படம் குறித்த முக்கிய தகவலை அப்டேட் செய்த டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து – எஸ்டிஆர் பண்டிகையை கொண்டாடுங்கடே!

- Advertisement -

ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அவரது இயக்கத்தில் வெளியான 2வது படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்த இந்த படம் கடந்த மாதம் 21ம் தேதி வெளியாகி 140 கோடி ரூபாய் வசூலை கடந்து பிளாக் பஸ்டர் மூவியாக வெற்றி பெற்றிருக்கிறது.

அடுத்து நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 51வது படத்தை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். சிம்புவின் 49வது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், சிம்புவின் 50வது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமியும் டைரக்ட் செய்ய உள்ளனர். இதில் சிம்புவின் 50வது படத்தை நடிகர் சிம்புவே அவரது அட்மின் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சொந்தமாக தயாரிக்கிறார்.

- Advertisement -

நடிகர் சிம்பு, அவரது தந்தை இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தர் இயக்கிய ஆரம்ப கால படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர். அப்போதே லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பெற்றவர். அதே போல் வளர்ந்த பிறகு நாயகனாகவும் நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார்.

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் மாஸ் ஹிட் ஆன நிலையில் அதன்பிறகு சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படமும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பத்து தல படம் சிம்புவுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது. இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை.

- Advertisement -

இந்த சூழலில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைப் படத்தில் சிம்பு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் திரிஷாவும் நடித்துள்ளார். அசோக் செல்வன் அபிராமி போன்றவர்களும் நடித்துள்ள தக்லைப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படம் கமல் சிம்பு நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான படம் என்பதால் ரசிகர்களின் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதற்கிடையே சிம்பு நடிக்கும் காட் ஆப் லவ் என்ற டைட்டிலில் உருவாகும் அவரது 51வது படம் குறித்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கூறியதாவது, வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் எஸ்டிஆர் 51 படப்பிடிப்பு துவங்கும். அடுத்த 2026ம் ஆண்டில் இந்த படம் ரிலீஸாகும். ஓ மை கடவுளே, டிராகன் படம் போல காட் ஆப் லவ் படமும் பெரிய அளவில் ரசிகர்ளை கவரும். ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு படமாக இது இருக்கும் என்று அஸ்வத் மாரிமுத்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்