நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான அவரது 45வது படம் கருப்பு பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இந்த படம் ரூ. 340 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியிருக்கிறது. கருப்பு படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்த 46வது படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படமும் கருப்பு போலவே மாபெரும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யா தனது 47வது படத்தில் நடித்து வருகிறார். ரோமாஞ்சம் ஆவேசம் போன்ற மலையாளத்தில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் இந்த படத்தை இயக்கி வருகிறார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
இதற்கிடையே இந்த சூர்யா 47 படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலானது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இயக்குனர் ஜித்து மாதவன் கூறியதாவது, சூர்யா நடிக்கும் இந்த படத்தில் நடிகர் மோகன்லால் நடிக்கவில்லை.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் எத்தனையோ யூகங்களா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்த படம் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் துவக்கி விழா பூஜைடன் துவங்கியது. இது ஒரு பக்காவான ஆக்சன் காமெடி படமாக உருவாக்கி வருகிறது. இந்த படத்தில் சூர்யா ஒரு கலகலப்பான மற்றும் வித்தியாசமான போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
மேலும் படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சில தினங்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளது என்றும் இயக்குனர் ஜித்து மாதவன் கூறியிருக்கிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து பிரபல மலையாள நடிகை நஸ்ரியா நசீம் கதாநாயகியாக நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் நேரடியாக நடிக்கும் தமிழ் படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் பிரேமலு பட இளம்நடிகர் நஸ்லென் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு சுஷின் ஷியாம் இசையமைக்கிறார். இதுவரை சூர்யா 47 படத்தின் தலைப்போ அல்லது அதிகாரபூர்வ போஸ்டர்களோ எதுவும் வெளியாகவில்லை. அதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். வருகிற ஜூலை மாதம் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்ட அதிரடி அப்டேட்டுகள் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.





