ஜெமினி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் கிரண். சரண் இயக்கி விக்ரம் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. ஒரு ஹீரோயினுக்கு முதல் படமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆனால் கண்டிப்பாக அவருக்கு சிறந்த எதிர்காலம் தமிழ் சினிமாவில் இருக்கும் விதிப்படி கிரணுக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைய ஆரம்பித்தன.
ஜெமினி படத்துக்கு பிறகு அஜித்துடன் வில்லன், கமல் ஹாசனுடன் அன்பே சிவம், பிரசாந்த்துடன் வின்னர் என தொடர்ந்து படங்களில் நடித்தார்.அந்தப் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இதன் காரணமாக நிச்சயம் அவர் தமிழ் சினிமாவில் பெரும் ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆர்மபித்தன. இதற்கிடையே பாபா படத்தில்கூட அவரைத்தான் முதலில் ஹீரோயினாக கமிட் செய்ய ரஜினிகாந்த் விரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும் பாடல்களுக்கு நடனம் ஆட ஆரம்பித்தார்.அதுவும் ஒருகட்டத்தில் இல்லாமல் போக ஒட்டுமொத்தமாக ஒதுங்கினார்.அதனையடுத்து ஆம்பள படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தார். இப்போது எந்த பட வாய்ப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் தனது சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவ்வாகவே இருக்கிறார். அதுமட்டுமின்றி தன்னுடன் டேட்டிங் செய்வதற்கும், வீடியோ கால் செய்வதற்கும் கட்டணத்தையும் விதித்திருந்தார் கிரண்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் பல விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், “நான் தொடர்ந்து ஆறு படங்கள் ஹிட் கொடுத்தேன். இருந்தாலும் திரையுலகம் ஏன் என்னை ஒதுக்கியது என்று தெரியவில்லை. சமூக வலைதளங்களில் நான் எனது புகைப்படத்தை பகிர்வது சினிமாவில் நான் நான் நடிக்க இன்னமும் ரெடி என்பதை உணர்த்துவதற்குத்தான். ஆனால் பட வாய்ப்பே வரவில்லை.
என்னை பற்றி நிறைய வதந்திகள் வந்திருக்கின்றன. அவற்றில் மோசமானது என்றால், எனக்கு மூன்று முறை திருமணம் ஆகிவிட்டது. நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற வதந்திதான். எனக்கு இன்னும் ஒருமுறைகூட திருமணம் ஆகவில்லை. அந்த வதந்தியை நம்பி ஷூட்டிங்கில் ஒருமுறை என்னை பார்த்த ரேவதி குழந்தை பிறந்ததை சொல்லவே இல்லை என கேட்டு எனக்கு வாழ்த்து சொன்னார். நான் எனக்கு திருமணமே ஆகவில்லை என்று விளக்கினேன்.





