- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் தேரை இழுத்து தெருவில் விட்ட நடிகை திரிஷா, முதல்வர் விஜயுடன் நேற்று பிறந்த நாளை...

மீண்டும் தேரை இழுத்து தெருவில் விட்ட நடிகை திரிஷா, முதல்வர் விஜயுடன் நேற்று பிறந்த நாளை கொண்டாடிய சாமி பட மாமி – என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா!

- Advertisement -

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் ஏற்கனவே விஜய் திரிஷா நட்பு பெரிய அளவில் சர்ச்சையான நிலையில் இன்று மாலை முதல்வர் விஜயுடன் அவரது பிறந்த நாளை நடிகை திரிஷா கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

நடிகர் விஜயுடன் 5 படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை திரிஷா. கில்லி ஆதி குருவி திருப்பாச்சி மற்றும் லியோ ஆகிய படங்களில் விஜய் ஹீரோவாக நடித்த நிலையில் அவருக்கு ஜோடியாக நாயகியாக நடித்தவர் திரிஷா. அதன்பிறகு தி கோட் என்ற படத்தில் விஜயுடன் ஒரு குத்தாட்ட பாடலுக்கு திரிஷா நடனமாடியிருந்தார்.

- Advertisement -

எந்த ஹீரோவுடனும் இப்படி சிங்கிள் பாடலுக்கு மட்டுமே நடனம் ஆடாத திரிஷா நடிகர் விஜய்க்காக மட்ட பாடலுக்கு நடனம் ஆடியது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கும் திரிஷாவுக்கும் அரசல் புரசலாக நெருக்கம் இருப்பதாக தகவல் பரவிய நிலையில், விஜயின் மனைவி சங்கீதாவும் அதை தனது விவாகரத்து மனுதாக்கலில் உறுதி செய்திருந்தார்.

தன் கணவர் விஜய்க்கு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக அவர் புகார் கூறிய நிலையில், தயாரிப்பாளர் இல்ல திருமண வரவேற்பு விழாவுக்கு நடிகர் விஜயும் நடிகை திரிஷாவும் ஒரே காரில் ஒரே நிற உடையில் வந்து மணமக்களை வாழ்த்தியது இணையத்தில் மேலும் சர்ச்சையை கிளப்பியது.

- Advertisement -

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் விஜய் தமிழக முதல்வராகவும் ஆகி விட்டார். ஒரு நாட்டை ஆட்சி செய்கிற தலைமை பொறுப்பில் மக்கள் தலைவராக உள்ளார். இந்த சூழலில் நடிகர் அஜீத்குமாரின் தாயார் மறைவுக்கு சென்ற போதும் திரிஷா அங்கு விஜயுடன் காணப்பட்டார். ஆனால் நேற்று விஜய் பிறந்த நாளுக்கு திரிஷா வாழ்த்து சொல்லாததால் தவெக கட்சியினரும் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

ஆனால் சற்று நேரத்துக்கு முன்பு விஜயுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திரிஷா பகிர்ந்துள்ளார். அதில் எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாக்கும் நபருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்று கூறியிருக்கிறார். சரியாக இரவு 12 மணிக்கு இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்திருப்பதையும் அவரது பதிவு உறுதிபடுத்துகிறது. மீண்டும் மீண்டும் முதல்வர் விஜய்க்கு அவப்பெயர் களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடிகை திரிஷாவின் இந்த செயல் அவரது ரசிகர்களை, தவெக கட்சியினரை விரக்தியடைய செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்