- Advertisement -
Homeபொழுதுபோக்குசாய்பல்லவி ரூட்டை பாலோ அப் பண்ணும் நடிகை கீர்த்தி சுரேஷ் - அட இந்த பார்மூலாவை...

சாய்பல்லவி ரூட்டை பாலோ அப் பண்ணும் நடிகை கீர்த்தி சுரேஷ் – அட இந்த பார்மூலாவை மத்த நட்சத்திர நாயகிகளும் கவனிப்பாங்களா?

- Advertisement -

தமிழ் சினிமாவை பொருத்த வரை தமிழை தாய்மொழியாக கொண்ட நடிகைகள் மிகவும் குறைவுதான். தாய்மொழியில் பேசி நடிக்கும் தமிழ்நாட்டு பெண்களுக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்பும் வரவேற்பும் கிடைப்பதில்லை என்பது கசப்பான உண்மையும் கூட. அதனால் தமிழ் நடிகைகள் என்றாலே அவர்கள் அம்மா அக்கா அண்ணி சித்தி கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

அதே நேரத்தில் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் போன்ற பிற மொழிகளில் இருந்து வரும் இளம் நாயகிகளுக்கு தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பும் அங்கீகாரமும் ஓரிரு படங்களிலேயே கிடைத்து விடுகிறது. ஒரு கட்டத்தில் தமிழில் நட்சத்திர நாயகியாக மாறும் அவர்கள் தமிழ் கற்றுக்கொள்கின்றனர்.

- Advertisement -

ஆனாலும் பிற மாநிலங்களை சேர்ந்த அழகான பல நடிகைகளுக்கு குரல்வளம் சரியாக அமைவது இல்லை. அதிலும் சில நடிகைகள் எம்ஆர் ராதா போன்று கட்டையான கரகரப்பான குரலிலோ அல்லது கீச்சு கீச்சு என்றுதான் பேசுகின்றனர். அதனால் அவர்களே விரும்பினாலும் சொந்த குரலில் டப்பிங் பேச முடியாது.

அதனால் பெரும்பாலும் தமிழ் பட ஹீரோக்கள் சொந்த குரலில் பேசி நடித்தாலும் நாயகிகள் பெரும்பாலும் டப்பிங் குரல்தான். அவர் கேமரா முன்பு நடிப்பதோடு சரி. அதற்கு பின்பு அவர்கள் அழுவதும் சிரிப்பதும் பல பக்கங்கள் ஆவேசமாக டயலாக் பேசுவதும் திறமையான டப்பிங் கலைஞரின் குரலில் உழைப்பில் இருக்கிறது.

- Advertisement -

ஆனால் இந்த வரிசையில் நடிகை சாய்பல்லவி சொந்த குரலில் பேசி படங்களில் நடிக்கிறார். தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி என எந்த மொழியில் நடித்தாலும் திரையில் ஒலிப்பது அவரது சொந்த குரலாக தான் உள்ளது. இது மற்றொரு விதத்தில் தேசிய விருதுகளுக்கு வாய்ப்பளிக்கிறது. ஏனெனில் சொந்த குரலில் பேசி நடிக்காத போது தேசிய விருது கிடைக்காது.

அதே போல் நடிகை சாய்பல்லவி பாணியில் தனது படங்களில் சொந்த குரலில் பேசி நடிக்கும் மற்றொரு முக்கிய நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். திருமணத்துக்கு பிறகும் அவர் பிஸியாக நடித்து வரும் நிலையில் தமிழ் தெலுங்கு மலையாளம் என எந்த மொழியில் நடித்தாலும் சாய்பல்லவியை போலவே அவரும் சொந்த குரலில் பேசி நடிப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்