- Advertisement -
Homeபொழுதுபோக்குமண்டாடி படம் இசை வெளியீட்டு விழா, திடீரென ஏற்பட்ட சிக்கல் - முடிவை மாற்றிக்கொண்ட படக்குழு,...

மண்டாடி படம் இசை வெளியீட்டு விழா, திடீரென ஏற்பட்ட சிக்கல் – முடிவை மாற்றிக்கொண்ட படக்குழு, நடிகர் சூரி நினைத்தபடி எல்லாம் நடக்குமா?

- Advertisement -

நடிகர் சூரி நடிப்பில் உருவாகி மிக விரைவில் திரைக்கு வரப் போகும் படம் மண்டாடி. வருகிற செப்டம்பர் மாதம் 10ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது. இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் எல்ரட் குமார் தயாரிப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. இதில் சூரியுடன் மஹிமா நம்பியார் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் உள்ள கடல் பகுதிகளில் கடற்கரையில் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நடந்துள்ளது. ஷூட்டிங் நடந்த போது இராமநாதபுரம் தொண்டி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தேவையான உதவிகளை படக்குழுவுக்கு செய்து ஒத்துழைப்பும் தந்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நாளை 21ம் தேதி மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் திறந்தவெளியில் மண்டாடி படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்தது. மேலும் படப்பிடிப்பில் உதவிய ஒத்துழைத்த இராமநாதபுரம் தொண்டி பகுதி மக்களை இந்த விழாவில் பார்வையாளர்களை பங்கேற்க அவர்களை வாகனங்களில் அழைத்து வரவும் திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் நாளை திட்டமிட்ட விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டதால் இந்த விழாவை வரும் 28ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். ஆனால் அதிலும் இப்போது ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. வருகிற 28ம் தேதி மதுரையில் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை அறிவிப்பு ஒன்று உறுதியாகி உள்ளது.

- Advertisement -

அதனால் கடும் மழைநாளில் அந்த விழாவை திறந்த வெளியில் நடத்துவது சாத்தியமில்லை என்பதால் அந்த இசை வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள ஒரு உள் அரங்கத்தில் நடத்திக்கொள்ள படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதற்காக இராமநாதபுரம் தொண்டி மக்களை மதுரைக்கு பதிலா சென்னைக்கு அழைத்து வந்து திரும்பவும் அவர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் படக்குழுவுக்கு ஏற்பட்டுள்ளது.

விடுதலை கருடன் மாமன் படங்களை போல மண்டாடி படமும் பெரிய ஹிட் கொடுத்தால் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்திவிட நடிகர் சூரி முடிவு செய்திருக்கிறார். இப்போது ரூ. 8 கோடி சம்பளம் வாங்கும் சூரி, ரவிக்குமார் இயக்கத்தில் அடுத்து நடிக்கும் படத்தில் ரூ. 25 கோடி சம்பளம் கேட்டுள்ளார். மண்டாடி படம் ஹிட் ஆனால்தான் அதற்கு வாய்ப்பு ஏற்படும் என்பதால் மண்டாடி பட இசை வெளியீட்டு விழாவை கொண்டாட்டமாக நடத்த சூரி திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்