- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை அங்கே தேடாதீங்க இருக்க மாட்டேன், அங்க தேடுங்க, இருப்பேன் - முதல்வர் விஜய்க்கு நெத்தியடி...

என்னை அங்கே தேடாதீங்க இருக்க மாட்டேன், அங்க தேடுங்க, இருப்பேன் – முதல்வர் விஜய்க்கு நெத்தியடி பதில் தந்த முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்!

- Advertisement -

நேற்று முன்தினம் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில் பேசிய முதல்வர் விஜய், திமுக தலைவர் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்கும் விதமாக ஒரு குட்டிக் கதை சொன்னார். அதில் பெரியவர் ஒருவர் சிறுவனிடம் இங்கே உங்க அப்பா இருப்பார்ன்னு சொன்னாங்க, எங்கே உங்க அப்பாவை காணோம் என்று நெற்றிக்கு மேல் கை வைத்து தேடுவது போல் நடித்து பேசிக் காட்டினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், கொளத்தூரில் தோல்வியடைந்த நிலையில் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின்தான் இப்போது திமுக எதிர்கட்சி தலைவராக சட்டசபையில் இருந்து வருகிறார். அதை கிண்டல் செய்யும் விதமாக முதல்வர் விஜய் குட்டிக் கதை சொன்னது பலத்த சர்ச்சையாகி உள்ளது.

இந்நிலையில் திருவாரூரில் நடந்த திமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தலைவர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, நேற்று முன்தினம் கூட நீங்க டிவியில் பார்த்திருப்பீங்க. ஒரு காட்சி நடந்திருக்கும். நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்குது. டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடவில்லை போன்ற பல பிரச்னைகள் உள்ளன.

இதை எல்லாம் நமது எதிர்கட்சி தலைவர் உதயநிதி, சட்டசபையில் பேசி முதல்வரிடம் சரியான தீர்வு காண வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு முதலமைச்சராக இருப்பவர் எங்கே காணோம், உங்க அப்பாவை காணோம் என்று பேசியிருக்கிறார்.

அப்பாவை அங்க தேடாதீங்க, மக்கள் மனசுல பதிஞ்சிருக்கான். அது போதும். நீங்க அங்கே தேடினால் இருக்க மாட்டேன். மக்கள் தேடினால் முதல் ஆளா அங்கே இருப்பேன். சட்டமன்றத்தில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்தில் நான் இருக்கிறேன்.

நான் அரசியலுக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகி விட்டது. இதுவரை மக்களோடு மக்களாக தான் நான் இருக்கிறேன். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணியாற்றக் கூடியவன் தான் என்று அந்த விழாவில் முன்னாள் முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். இது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

சற்று முன்