- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு வழியாக அஜீத் படப்பிடிப்பு துவக்க நாள் அறிவிப்பு, அட இதைக்கூட ஏஐ தொழில்நுட்பத்துல தான்...

ஒரு வழியாக அஜீத் படப்பிடிப்பு துவக்க நாள் அறிவிப்பு, அட இதைக்கூட ஏஐ தொழில்நுட்பத்துல தான் செய்வாங்களா? நொந்து போன ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி. 2 ஆண்டுகள் ஆன நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டேர் டெவில் என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படப்பிடிப்பில் இழுபறி நீடித்த நிலையில் இப்போது படப்பிடிப்பு துவங்கும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற நவம்பர் 2ம் தேதி டேர் டெவில் படப்பிடிப்பு துவங்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக படத்தின் நாயகன் அஜீத்குமாரை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை வைத்து வெளியிடாமல் ஏஐ தொழில்நுட்பத்தில் அஜீத் படத்தை வைத்து போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

- Advertisement -

அதைப் பார்த்த ரசிகர்கள், படத்தின் ஷூட்டிங் துவங்கும் நாளையே ஏஐ புகைப்படம் வைத்து வெளியிட்டுள்ள படக்குழு, படத்தை முழுமையாக ஷூட்டிங் செய்து எடுக்குமா, அல்லது அஜீத் புகைப்படங்களை ஏஐ வீடியோவாக வைத்து படமா தந்துவிடுவார்களா? அவர் கார் ரேஸ்க்கு சென்றுவிட்டால் அதுதான் நடக்கும் என்று இப்போதே கலாய்க்க துவங்கி விட்டனர்.

மேலும் வழக்கமாக தனது படங்கள் ஷூட்டிங்கை ஐதராபாத்தில் வைத்துக்கொள்ள தான் அஜீத்குமார் அதிக ஆர்வம் காட்டுவார். ஏனென்றால் தமிழ்நாட்டில் ரசிகர்கள் தொல்லை ஜாஸ்தியாம். அதனால் தயாரிப்பாளருக்கு இரட்டை செலவு ஏற்படும் என்ற நிலை இருந்தது.

- Advertisement -

இந்த முறை டேர்டெவில் படத்தை அவரே தயாரிப்பதால் ஐதராபாத்துக்கு ஷூட்டிங் செல்வாரா, அல்லது சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்துவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நடிகர் அஜீத்குமார் நடிக்கும் இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பிறந்த நாள் இன்று. இந்த நாளில் அவர் இயக்கும் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் துவக்க நாள் அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டு இருந்தால் அவருக்கும் அது ஒரு மரியாதையாக வாழ்த்தாக இருந்திருக்கும்.

அப்படி செய்யாமல் நேற்று மாலை அந்த போஸ்டர் வெளியானது. அதுவும் ஏஐ தொழில்நுட்பத்தில் அந்த போஸ்டரை வடிவமைத்து வெளியிட்டு உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு அஜீத்குமாரே நடித்து தயாரிக்கும் படம் அது. அவரது ஒரிஜினல் போட்டோ இல்லாமல் ஏஐ தொழில்நுட்ப புகைப்படத்தை வைத்துள்ளனர். இதற்கே நேரம் ஒதுக்காத அவர் ஷூட்டிங் வர நேரம் இருக்குமா, அல்லது கார் ரேஸ்க்கு போய் விடுவாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்