- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர்கள் சிவகார்த்திகேயன், கவின் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட திடீர் மாற்றம், இவங்களுக்கு என்னதான் ஆச்சு என...

நடிகர்கள் சிவகார்த்திகேயன், கவின் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட திடீர் மாற்றம், இவங்களுக்கு என்னதான் ஆச்சு என குழப்பத்தில் தவிக்கும் ரசிகர்கள்!

- Advertisement -

திருச்சியைச் சேர்ந்த சிவகார்த்திகேயன், விஜய் டிவியில் அது இது எது என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமானவர். தொடர்ந்து சினிமா கலைஞர்களை நேர்காணல் செய்தல், சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல் போன்ற பணிகளிலும் அவர் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் நடிகர் தனுஷின் நண்பரானார். அதன்பிறகு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து மனம்கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ, காக்கிச்சட்டை, வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார்.

- Advertisement -

இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள அமரன் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு படமாக, அமரன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்துள்ளார். வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு அமரன் படம் ரிலீஸ் ஆகிறது.

நடிகர் சிவகார்த்திகேயனை போலவே விஜய் டிவியில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் நடிகர் கவின். கனா காணும் காலங்கள் என்ற விஜய் டிவி சீரியலில் நடிகராக அறிமுகமான கவின், பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் அதிக அளவில் கவனம் பெற்றார். அதன் பிறகு சினிமாவில் நடிக்க துவங்கிய கவின், டாடா படம் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். தொடர்ந்து லிப்ட், ஸ்டார் போன்ற படங்களில் கவின் நடித்து சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் நடிப்பை விட்டு அரசியலுக்கு சென்ற நடிகர் விஜய் இடத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வர உள்ளார் என்ற ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. விஜய் இடத்துக்கு சிவகார்த்திகேயன் வருவது போல் சிவகார்த்திகேயன் இடத்துக்கு கவின் வரப்போகிறார் என்ற தகவலும் பரவி வருகிறது. ஏனெனில் சிவகார்த்திகேயன் எப்படி டிவியில் இருந்து சினிமாவுக்கு மாறி இந்த அளவுக்கு புகழும் பெயரும் பெற்றாரோ, அதே பார்மூலாவை பின்பற்றி நடிகர் கவினும் தனது சினிமா பயணத்தை அமைத்துக் கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் துவக்கத்தில் கவின் குறித்து சிவகார்த்திகேயன் பல இடங்களில், தன் நண்பர்கள் வட்டாரத்தில் பெருமையாக பேசியிருக்கிறார். அதேபோல் சிவகார்த்திகேயன் குறித்து நடிகர் கவினும் தன் நண்பர்கள் வட்டாரத்தில் நெருங்கிய உறவுகளிடம் அடிக்கடி பேசுவது வழக்கமாக இருந்தது. ஆனால் சமீப காலமாக கவின் குறித்து சிவகார்த்திகேயனும், சிவகார்த்திகேயன் குறித்து கவினும் பேசுவது இல்லை. அவர்களைப் பற்றிய கருத்துகளை கூறுவதும் இல்லை. அவரகளுக்கு இடையில் ஏதோ நடந்துள்ளது என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்