நடிகர் சல்மான்கான், பாலிவுட் ஸ்டார்களில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் சல்மான்கான், மாதுரி தீக்சித் நடித்த ஹப் ஆப் ஹே ஹைகோன் படம், பெரிய அளவில் வெற்றிப்படமாக அமைந்தது. தமிழ்நாட்டில் இந்தி தெரியாதவர்கள் கூட இந்த படத்தை பலமுறை விரும்பி பார்த்தனர்.
ஏனெனில், இந்த படம் செல்வச் செழிப்புமிக்க குடும்பங்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது. பாடல்களை எஸ்பி பாலசுப்ரமணியம் பாடி இருந்தார். அனைத்து பாடல்களும் செம ஹிட் ஆனது. அண்ணனின் மனைவி இறந்தவிட, அடுத்து, தம்பி (சல்மான்கான்) காதலிக்கும் பெண்ணை (மாதுரி தீக்சித்) அண்ணனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கும். கடைசியில், அவர்களது காதலை தெரிந்துக்கொண்ட அண்ணனே, அவர்களது திருமணத்தை நடத்தி வைப்பதுதான் கதை.
இந்தியில் இப்போதும் முன்னணியில் இருக்கும் சல்மான்கான் படம் டைகர் 3 சமீபத்தில் வெளியானது. படம் விமர்சன ரீதியாக சுமார் என கூறப்பட்டாலும், வசூலில் பட்டையை கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பாலிவுட் ஸ்டார்களில் மற்றொரு முக்கிய நடிகரான ஷாருக்கான் கேமியோ ரோலில், அதாவது கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
அதே போல், பல மாதங்களுக்கு முன் வெளிவந்த ஷாருக்கான் நடித்த பதான் படத்திலும், சல்மான்கான் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். அதாவது ஷாருக்கான் படத்தில் சல்மான்கானும், சல்மான்கான் நடிக்கும் படத்தில் ஷாருக்கானும் கேமியோ ரோல்களில் சில காட்சிகளில் நடித்து, தங்கள் இருவருக்குமான அன்பை, நட்பை வெளிப்படுத்துகின்றனர்.
இதுகுறித்து சல்மான்கான் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறுகையில், நாங்கள் இருவரும் கேமியோ ரோல்களில் நடிப்பதை ரசிகர்கள் விரும்புவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களின் இரு தரப்பு ரசிகர்களிடையே சமூகவலைதளங்களில் மோதல் போக்கு இருப்பது எனக்கு தெரியாது. அதனால் என் ரசிகர்களிடம் நான் சொல்வது என்னவென்றால், ஷாருக்கான் எனது சகோதரர். அதனால், உங்களுக்கும் அவர் சகோதர்தான். அவருக்கு எந்த தீங்கும் ஏற்படக் கூடாது என்பதுதான் முக்கியம் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் தமிழ் சினிமாவில் ரஜினி நடிக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் இருக்க மறுக்கிறார். விஜய் நடிக்கும் ஷூட்டிங் ஸ்பாட் அஜர்பைஜான் என்றால், துபாய்க்கு அஜீத் ஷூட்டிங்கை மாற்றுகிறார். இப்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட அருகருகே இருப்பதை தவிர்க்கின்றனர். ஆனால் சீனியர்களாக ரஜினி, கமல் தேடிப்போய் ஒருவரை ஒருவர் பார்த்து நலம் விசாரிக்கின்றனர். அன்பு பாராட்டுகின்றனர். இதற்கு பிறகாவது தமிழ் நடிகர்கள் கேமியோ ரோல்களில் நடிக்க முன்வர வேண்டும்.





