தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மூத்த நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் சிவக்குமார் சரத்குமார் பார்த்திபன் பிரபு கார்த்திக் பாண்டியராஜன் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
வயதான நடிகர்கள் கவுண்டமணி செந்தில் கூட நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பழம்பெரும் நடிகை கேஆர் விஜயாவும் கூட நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும் நடிகைகள் நயன்தாரா திரிஷா கீர்த்தி சுரேஷ் சுகன்யா அம்பிகா மற்றும் நடிகர்கள் விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் விக்ரம் பிரபுஎன ஏராளமான நடிகர் நடிகைகள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
திரைப்பட இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என ஏராளமான திரைத்துறை சார்ந்தவர்கள் அவரது மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். கேரளாவில் இருந்து மம்முட்டி சுரேஷ்கோபி திலீப் போன்ற மலையாள நடிகர்கள் கூட வந்தனர் மேலும் சினிமா தொடர்பு இல்லாத பலரும் வந்தனர். அவருடைய திறமையை பார்த்து வியந்தவர்கள் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் உள்ள அனைவருமே வந்துவிட்டனர்.
அப்படி வரமுடியாதவர்கள் சூழ்நிலையை சுட்டிக்காட்டி வீடியோ மூலமும் பதிவுகளின் மூலமும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் அஜீத்குமார் ஒருவரை தவிர. ஒருவர் இறந்தால் இரங்கல் தெரிவிப்பது என்பது நற்பண்பு. சினிமா துறை சார்ந்த உச்சம் பெற்றவரின் இறப்பிற்கு கூட வராமல் இருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் கே பாக்யராஜ் மறைவுக்கு மட்டுமல்ல, இயக்குனர் இமயம் பாரதிராஜா பாடகர் எஸ்பிபி கேப்டன் விஜயகாந்த் நடிகர் விவேக் என பலரது இறப்பிற்கும் கூட அஜீத்குமார் நேரில் வரவில்லை. பாக்யராஜ் குடும்பமே சினிமா குடும்பம் தான். துணை நடிகர்கள் முதல் சின்ன சின்ன நடிகர்கள்கூட வந்தானர். ஆனால் அஜீத்குமார் வரவே இல்லை.
பொது விஷயங்களில் கலந்துக்கொள்ளாமல் இருப்பது அஜீத்குமாரின் தனிப்பட்ட குணமாக கூட இருக்கலாம். ஆனால் இப்படி எல்லா இறப்புகளிலும் ஒதுங்கி இருப்பது என்பது அவர் அடைந்திருக்கும் உச்சத்திற்கு அழகல்ல. நேரில் வராவிட்டாலும் ஒரு இரங்கல் தெரிவிப்பதில் அவருக்கு என்ன பிரச்னை வந்துவிடப் போகிறது என்று ரசிகர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.





