- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடிக்கடி காலில் விழுந்த நடிகர் வடிவேலு, கவுண்டமணி சொன்னது அப்படியே கடைசியில் நடந்தது -...

அடிக்கடி காலில் விழுந்த நடிகர் வடிவேலு, கவுண்டமணி சொன்னது அப்படியே கடைசியில் நடந்தது – இயக்குனர் வி சேகர் சொன்ன அந்த உண்மை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் குடும்பப் படங்களை இயக்கி ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றவர் இயக்குனர் விசு. அவரை போலவே பல குடும்ப படங்களை திரையில் கொண்டு வந்தவர் இயக்குனர் வி சேகர். இவர் இயக்குனர் கே பாக்யராஜின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் வி சேகர் இயக்கிய ஒண்ணா இருக்க கத்துக்கணும் பொங்கலோ பொங்கல் விரலுக்கேத்த வீக்கம் பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் நான் பெத்த மகனே காலம் மாறிப்போச்சு வரவு எட்டணா செலவு பத்தணா புகுந்த வீடா பொறந்த வீடா உள்ளிட்ட பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்ற படங்களாக இருந்தன.

- Advertisement -

பெரும்பாலும் வி சேகர் இயக்கும் படங்களில் கவுண்டமணி செந்தில் வடிவேலு போன்ற காமெடி நடிகர்கள் தான் பிரதான கேரக்டர்களில் நடித்திருப்பார்கள். அந்த வகையில் வி சேகர் இயக்கிய குடும்ப படங்கள் எல்லாமே ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களாக இருந்தன. வி சேகர் இயக்கிய பல படங்களில் கவுண்டமணி செந்தில் உடன் நடிகர் வடிவேலுவும் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.

அப்போது நடிகர் வடிவேலு வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். வி சேகர் இயக்கிய படங்களில் அவர் நடித்த காமெடி காட்சிகள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற நிலையில் பிறகுதான் மற்ற ஹீரோக்களுடன் அதிக படங்களிலும் காமெடி ரோலில் நடித்து வடிவேலு உச்சத்தை தொட்டார். ஒரு கட்டத்தில் வி சேகர் இயக்கிய படங்களுக்கு நடிகர் வடிவேலு கால்ஷீட் தரவில்லை. அவர் போன் செய்தாலும் எடுப்பதில்லை என்று கூறப்பட்டது.

- Advertisement -

ஒருமுறை இயக்குனர் வி சேகர் ஒரு நேர்காணலில் பங்கேற்றபோது நடிகர் கவுண்டமணி மற்றும் வடிவேலு குறித்து பேசி இருக்கிறார். அப்போது இயக்குனர் விசேகர் கூறியதாவது, வடிவேலு என்னை பார்க்க வந்தால் அப்போது என்னுடைய காலை தொட்டு கும்பிடுவார். ஒரு நாளைக்கு பத்துவாட்டி அப்படி என் காலைத் தொட்டி கும்பிடுவார்.

அப்போது பக்கத்துல இருந்த கவுண்டமணி சொல்லுவார். ஒருத்தன் வந்தவுடனே காலை தொட்டு கும்பிடலாம். தப்பு இல்ல. இப்படி பல தடவை பார்க்கும் போதெல்லாம் தொட்டு தொட்டு கும்பிடுறான்னா அவன் காலை வாரப் போறான்னு அர்த்தம். நாங்க படத்துக்காக மட்டும் தான் நடிக்கிறோம். இவன் தான் உண்மையிலுமே நடிகன் என்று சொன்னார். கடைசியில் அப்படி தான் கவுண்டமணி சொன்னது போல் தான் நடந்தது என்று இயக்குனர் வி சேகர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்