பொதுவாக சிலருக்கு நாய்கள் பூனைகள் போன்ற செல்ல பிராணிகளை பார்த்தாலே ரொம்பவும் பிடிக்கும். அவைகளை வீட்டில் ஆசை ஆசையாக வளர்ப்பார்கள். பெட்ரூம் வரை கூட அதை அனுமதிப்பார்கள் எப்போதும் அதை தூக்கி கையில் வைத்துக்கொண்டு கொஞ்சுவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு நாய்கள் பூனைகளை கண்டாலே பிடிக்காது. அவர்களுக்கு அது மிகவும் அலர்ஜியாக இருக்கும்.
ஆனால் திரைப்பட நடிகர் நடிகைகளில் ஒரு சிலருக்கு நாய்கள் பூனைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர்கள் தங்களது வீட்டில் செல்லப் பிராணிகளாக நாய்க்குட்டிகளை வளர்த்து அதை கொஞ்சுவார்கள். அந்த புகைப்படங்களை வீடியோக்களை அடிக்கடி தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை தெரியப்படுத்துவார்கள்.
அது போல் நடிகை திரிஷா எப்போதும் நாய்க்குட்டியுடன் இருப்பது வழக்கம். நாய்க்குட்டிகளுடன் அவர் இருக்கும் புகைப்படங்களை வீடியோக்களை அடிக்கடி தனது வலைதள பக்கங்களில் நடிகை திரிஷா வெளியிட்டு வருகிறார். நாய்க்குட்டிகள் என்றாலே நடிகை திரிஷாவுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
ஒருமுறை அவரது செல்ல நாய்க்குட்டி இருந்த போது படப்பிடிப்புக்கு கூட போகாமல் சோகத்தில் இருந்தார் என தகவல் வெளியானது.
இந்நிலையில் சமீபத்தில் கட்டா குஸ்தி 2 படம் குறித்த பிரமோஷனில் பங்கேற்று பேசிய நடிகர் விஷ்ணு விஷால் ஒரு முக்கிய தகவலை கூறியிருக்கிறார். அந்த நேர்காணலின்போது நடிகர் விஷ்ணு விஷால் கூறியதாவது, நான் இதுவரைக்கும் இந்த விஷயத்தை வெளியில் சொன்னதே இல்லை. இப்போது திரிஷாவிடம் இருக்கும் நாய்க்குட்டி என்னுடைய டெடி என்ற செல்ல நாயின் மகள்தான். அது பூடில் இன நாய்.
எனது மனைவியும் திரிஷாவும் நெருங்கிய தோழிகள். இரண்டு பேரும் அடிக்கடி நாய்கள் பற்றிய பேசிக் கொண்டு இருப்பார்கள். இதை நான் இப்போது ஷேர் செய்து விட்டதால் திரிஷா இதற்காக கோபப்பட மாட்டார் என்று நம்புகிறேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
நடிகை திரிஷா எப்போதும் அவர் வளர்க்கும் செல்ல நாய்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பவர். இப்போது அவரது வீட்டில் ஒரு செல்ல நாயை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்கு இஸ்ஸி என்றும் பெயர் வைத்திருக்கிறார். அந்த நாய்க்குட்டியுடன் இருக்கும் திரிஷாவின் புகைப்படங்கள் வீடியோக்கள் அடிக்கடி சோசியல் மீடியாவில் வைரல் ஆகின்றன. தங்களது வீட்டில் ஒருவர் போலவே அந்த நாய்க்குட்டியை திரிஷாவும் அவரது அம்மாவும் வளர்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





