- Advertisement -
Homeபொழுதுபோக்குஅது நடந்திருந்தால் இப்படி ஒரு அவமானத்தோடு உங்கள் முன்னால் நின்றிருக்க மாட்டேன் - கல்லுாரி விழாவில்...

அது நடந்திருந்தால் இப்படி ஒரு அவமானத்தோடு உங்கள் முன்னால் நின்றிருக்க மாட்டேன் – கல்லுாரி விழாவில் மாணவர்கள் மத்தியில் பேசிய அன்றைய முதல்வர் எம்ஜிஆர்!

- Advertisement -

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சினிமாவில் எப்படி நல்லவராக இருந்தாரோ அதே போல் தான் நிஜ வாழ்க்கையிலும் நடந்துக்கொண்டார். மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு உண்மையான தலைவராக அவர் இருந்ததுதான் அவரது அரசியல் வெற்றிக்கு பெரிய காரணமாக இருந்தது. அதே போல் கல்வி சிறந்த நாடாக தமிழ்நாட்டை உருவாக்கவும் அவர் அதிக கவனம் அக்கறை காட்டினார்.

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் ஒரு முறை கல்லூரியில் நடந்த விழா ஒன்றுக்கு நேரில் சென்றார். அப்போது அவர் மேடையில் பேசியது சில வார்த்தைகள்தான். ஆனால் காலத்துக்கும் அது அழியாக கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய வாழ்க்கை தத்துவமாக அமைந்து விட்டது. இன்றும் அவரது பேச்சு 100 சதவீதம் ஏற்க வேண்டிய ஒரு அற்புதமான கருத்தாக உள்ளது.

- Advertisement -

அந்த விழாவில் அன்றைய முதல்வர் எம்ஜிஆர் பேசியதாவது, மாணவர்களே நான் இன்று முதல்வர். இந்திராகாந்தி முதல் அமெரிக்க அதிபர் வரை பேசும் செல்வாக்கு உடையவன். என்னை அனுதினமும் சந்திக்க காத்துக் கிடக்கும் கோடீஸ்வரர்கள் ஏராளம்; உதவி பெற வரிசையில் நிற்போர் ஏராளம்; தினமும் என் வீட்டில் பசியாறுவோரும் ஏராளம்.

அப்படிப்பட்ட என்னால் வாங்க முடியாதது கல்வி. இன்று ஒரு மாகாணத்தின் முதல்வர் என்றாலும் என் கல்வி நிலை 4ம் வகுப்புத்தான். எனக்கும் படிக்கும் ஆசை இருந்தது. ஆனால் அதைவிட பலமடங்கு வறுமை வீட்டில் இருந்தது. எனவே நடிக்க வந்துவிட்டேன். எனக்கு மட்டுமல்ல, உலகில் எத்தனையோ பேருக்கு கிடைக்காத பாக்கியம் கல்வி.

- Advertisement -

அது உங்களுக்கு கிடைத்திருக்கின்றது. அரசியல் எப்பொழுதும் செய்யலாம்; உரிமைகளை எப்பொழுதும் கோரலாம்; ஆனால் படிப்பு உரிய காலத்தில் இல்லாவிட்டால் படிக்க முடியாது. என் செல்வங்களே எனக்கு கிடைக்காத கல்வி உங்களுக்கு கிடைத்திருக்கின்றது. அதை நல்ல முறையில் படித்து நாட்டுக்கும், வீட்டுக்கும் பயனுள்ள மனிதர்களாக வாழுங்கள்.

கல்விதான் இந்த அரசின் முதல் கடமை.அதனால்தான் இன்றளவும் காமராஜரை என் வழிகாட்டியாக கொண்டு பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு என சோறு போட்டு படிக்க வைக்கும் முயற்சியினை எடுக்கின்றேன். எனக்கும் அன்று இப்படி சோறு போட ஒரு அரசு இருந்திருந்தால், நான்காம் வகுப்பை தாண்டாதவன் எனும் அவமானத்தோடு உங்கள் முன் நின்று கொண்டிருக்க‌ மாட்டேன் என்று புரட்சித் தலைவர் எம்ஜிஆர் உருக்கமாக அன்று பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்