- Advertisement -
Homeபொழுதுபோக்குதேசிய விருது யாருக்கு கொடுக்கணும் தெரியுமா? - தனுஷ் ரசிகர்கள் அப்செட் ஆயிடுவாங்களே? ஜனநாயகன் பட...

தேசிய விருது யாருக்கு கொடுக்கணும் தெரியுமா? – தனுஷ் ரசிகர்கள் அப்செட் ஆயிடுவாங்களே? ஜனநாயகன் பட இயக்குனர் எச் வினோத் இப்படி சொல்லி இருக்கிறாரே?

- Advertisement -

மத்திய அரசின் சார்பில் சமீபத்தில் 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் அமரன் கேப்டன் மில்லர் ராயன் மெய்யழகன் மகாராஜா உள்ளிட்ட சில படங்களுக்கு மட்டுமே விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2024ல் வெளியான பல படங்கள் சிறந்தவையாக இருந்தும் அந்த படங்கள் புறக்கணிக்கப்பட்டன.

குறிப்பாக லப்பர் பந்து தங்கலான் ஜமா திரு மாணிக்கம் மகாராஜா வாழை போன்ற படங்கள் விருது லிஸ்ட்டில் இடம்பிடிக்கவில்லை. மகாராஜா படத்தில் நடித்த சாச்சனாவுக்கு மற்றும் சிறந்த துணை நடிகை விருது அறிவிக்கப்பட்டது. அற்புதமான நடிப்பை தந்த சியான் விக்ரம், மகாராஜா படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் லப்பர் பந்து படம் போன்றவை கண்டுகொள்ளப்படவில்லை.

- Advertisement -

இந்நிலையில் நல்ல படங்களை தேர்வு செய்யாமல் இப்படி ஒரு தலைபட்சமாக அதுவும் நடிகர் தனுஷ் இயக்கிய படத்துக்கும் அவர் நடித்த படத்துக்கும் விருதுகளை வழங்கியது தமிழ் சினிமா துறைக்கும் ரசிகர்களுக்கும் பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. இதற்கு பின்னால் அரசியல் இருப்பதாகவும் பாஜகவுக்கு தனுஷூக்கு ஆதரவு காட்டுவதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது.

சமீபத்தில் தேசிய விருதுகள் குறித்து ஒரு நேர்காணலில் பேசிய ஜனநாயகன் பட இயக்குனர் எச் வினோத் கூறியதாவது, தேசிய விருது யாருக்கு கொடுக்கப்படவேண்டும் என்றால் தன்னுடைய சுயநலத்துக்காக பணத்துக்காக புகழுக்காக படம் எடுக்காமல் அந்த துறை வளர்ச்சிக்காகவும் மக்கள் வளர்ச்சிக்காகவும் யார் படம் எடுக்குறாங்களோ அவர்களுக்குத்தான் விருது கொடுக்கணும்.

- Advertisement -

ஏன்னா அவங்க தான் பணத்துக்காக இல்லாம அவங்க சொந்த வாழ்க்கை பற்றி யோசிக்காமல் மத்தவங்களுக்காக படம் எடுக்குறாங்க. அப்போ அவங்களுக்கு விருது கொடுத்தால் அவங்க எங்கரேஜ் ஆவாங்க. விருது கிடைக்காத படங்கள் மக்கள் மனசுக்குள்ளே இருக்கு. மக்கள் மனசுக்குள்ள போறதை விட பெரிய விருது என்று ஒன்றும் இல்லை என்று இயக்குனர் எச் வினோத் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே ராயன் கேப்டன் மில்லர் படங்களுக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது குறித்து ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. குறிப்பாக தங்கலான் படத்தில் கஷ்டப்பட்டு நடித்த சியான் விக்ரமுக்கு தர வேண்டிய விருதை சிறந்த நடிகர் என தனுஷூக்கு கொடுத்துட்டாங்களே என கடுப்பில் பலரும் உள்ள நிலையில், எச் வினோத்தின் இந்த கருத்து தனுஷ் ரசிகர்களை அப்செட் செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்