திமுக குடும்பத்தில் இருந்து நடிக்க வந்தவர் நடிகர் அருள்நிதி. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வம்சம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சுனைனா நடித்திருந்தார். கஞ்சா கருப்பு கிஷோர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. முதல் படமாக இருந்தாலும் நல்ல நடிப்பை அருள்நிதி வம்சம் படத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.
தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்த நிலையில் டிமாண்டி காலனி டிமாண்டி காலனி 2 படங்கள் அவருக்கு பெரிய வெற்றியை தந்தது. மிக விரைவில் டிமாண்டி காலனி 3ம் பாகம் படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான அருள்வான் படத்தில் நடிகர் அருள்நிதி கலெக்டர் கேரக்டரில் நடித்திருந்தார். அதுவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் அருள்நிதி கூறியதாவது, ஸ்கிரிப்ட் கேட்காமல் நான் படத்தில் நடிக்க ஓகே பண்றது டைரக்டர் பாண்டிராஜ் சார் தான். ஆனா அவருக்கு தெரியும். ஆனா அவர் என்கிட்ட கடுப்பாயிடுவார். போன்ல ஏதாவது பேசிட்டே இருப்பார். கதை எதாவது சொல்லுவார்.
நான் குறுக்க குறுக்க பேசிட்டே இருப்பேன். அப்போ அவர், அய்யோ உங்ககிட்ட கதை சொல்றதுக்குள்ள எனக்கு உயிரே போயிடுது அருள்ன்னு சொல்லுவார். அது அவர் எனக்கு பண்ண போற கதைன்னு கிடையாது. நான் பண்ணப் போற படங்கள் கதையை அவர்கிட்ட போன்ல பேசும்போது சொல்லுவேன். அவர் கதையை ஃபுல்லா கேட்பார்.
அடுத்ததா நான் இந்த கதையை தான் பண்ண போறேன் சார் அவர்கிட்ட ஃபுல்லா சொல்லிடுவேன். அவர் வந்துட்டு அதை பொறுமையாக கேட்பார். இடையில் எதுவும் குறுக்கீடு செய்ய மாட்டார். ஆனா அவர் என்கிட்ட ஒரு சீன் சொன்னாக்கூட அதை நான் அவரை முழுமையா சொல்லவே விட மாட்டேன்.
குறுக்க குறுக்க ஏதாவது டவுட் கேட்டுக்கிட்டே இருப்பேன். கொஞ்சமாவது கதையை சொல்ல விடறீங்களா? பாவங்க உங்ககிட்ட எல்லாம் வந்து கதை சொல்றவங்க நிலமை என்று அவர் என்கிட்ட சொல்லி ரொம்ப வருத்தப்படுவார் என்று நடிகர் அருள்நிதி அந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





