நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை. அதனால் குறிப்பிட்ட ஜனவரி 9ம் தேதியில் பொங்கலுக்கு அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. இது தளபதி ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் விரக்தியடைய செய்திருக்கிறது. எனினும் பராசக்தி படம் மட்டுமே பொங்கலுக்கு ரிலீஸாகி உள்ளது.
இதற்கிடையே பராசக்தி படமும் ஜனநாயகன் படமும் ஒன்றாக வெளியாகும் என்ற சூழல் முன்பு இருந்த நிலையில் பல தியேட்டர் உரிமையாளர்கள், ஜனநாயகன் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களிடம் பராசக்தி படத்துடன் ஜனநாயகன் படத்தையும் 2 காட்சிகள் திரையிட கேட்டுக்கொண்ட போது அவர்கள் கட்டாயமாக மறுத்து விட்டனர்.
ஜனநாயகன் படம் மட்டுமே ஓடும் என்றும் கண்டிஷனாக கூறி மறுத்துவிட்டனர். ஆனால் கடைசியில் நிலமை தலைகீழாக மாறிவிட்டது. ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாததால் பலரும் வினியோகஸ்தரிடம் பராசக்தி படத்தை கேட்க நிச்சயமாக தர முடியாது என்று அவர்கள் கூறியதால் தியேட்டர் உரிமையாளர்கள் அப்செட் ஆகிவிட்டனர்.
இந்த சூழலில் அவர்களுக்கு கை கொடுத்தது நடிகர் விக்ரம் பிரபு நடித்த சிறை படம்தான். அந்த படம் வெளியாகி 3 வாரங்கள் கடந்து பல தியேட்டர்களில் ஓடிய நிலையில் காட்சிகளில் 50 முதல் 60 சதவீதம் வரை ரசிகர்கள் கூட்டம் குறையாமல் இருந்ததால் 10ம் தேதிக்கு பிறகும் சிறை படமே பல தியேட்டர்களில் ஓடி வருகிறது. ஏனெனில் அந்த படங்களுக்கு பராசக்தி படம் கிடைக்கவில்லை.
சிறை படத்தை தயாரித்தவர் செவன் ஸ்டுடியோ கிரீன் நிறுவன தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார் தான். இவர்தான் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் லியோ படங்களை தயாரித்தவர். இந்த படங்களின் மூலம் கணிசமான லாபமும் சம்பாதி்ததவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவரது மகன்தான் அக்சய்குமார் சிறை படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
ஜனநாயகன் படம் திரைக்கு வராத நிலையில் பராசக்தி படமும் பல தியேட்டர்களுக்கு கிடைக்காத நிலையில் சிறை படமே தொடர்ந்து ஓடி வருகிறது. இதன்மூலம் தனது நண்பர் லலித்குமாருக்கு மறைமுகமாக நடிகர் விஜய் உதவி செய்திருக்கிறார். தளபதி வேற லெவலில் லலித்குமாருக்கு உதவியிருக்கிறார் என்று விஜய் ரசிகர்கள் பெருமையாக கூறி வருகின்றனர்.





