தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவரது 25வது படம் பராசக்தி. அந்த படத்தை தொடர்ந்து இப்போது சேயோன் என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த படத்தை தாய்க்கிழவி பட இயக்குனர் சிவக்குமார் முருகேசன் டைரக்ட் செய்து வருகிறார். மதுரையில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
அமரன் படத்தை தொடர்ந்து சேயோன் படத்தையும் நடிகர் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். தேனி மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது.
சேயோன் படத்தை தொடர்ந்து பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் கமிட்டாகி இருக்கிறார். பார்க்கிங் படம் வெளியாகி 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தை அவர் இயக்க உள்ளார். சிம்பு ரஜினி படங்களை இயக்கும் வாய்ப்பு அவருக்கு மிஸ் ஆகிவிட்டது.
ராம்குமார் பாலகிருஷ்ணன் படத்தை தொடர்ந்து இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நடிகர் சிவகார்த்திகேயன் ஒப்புதல் தந்திருக்கிறார். இதற்காக மாவீரன் படத்தின் இரண்டாம் பாகம் கதை மட்டும் இன்றி மடோன் அஸ்வின் மற்றொரு புதிய கதையையும் தயாராக வைத்திருக்கிறார்.
ஒருவேளை மாவீரன் 2 படம் கதை சிவகார்த்திகேயனுக்கு பிடிக்காத பட்சத்தில் வேறு புதிய கதையை தயார் செய்து இயக்குனர் மடோன் அஸ்வின் தயாராக உள்ளார். அதனால் கண்டிப்பாக மாவீரன் 2 அல்லது வேறொரு புதிய கதையில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பது உறுதி என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் மாவீரன் படத்தில் அரசியல்வாதி கேரக்டரில் வில்லனாக நடித்த இயக்குனர் மிஷ்கின் 2ம் பாகத்திலும் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. ஆனால் முதல் பாகத்தில் கதைப்படி அவர் இறந்து விடுகிறார். அதனால் அவர் நடிக்க வாய்ப்பில்லை. அதே வேளையில் மாவீரன் 2 என்ற பெயரில் வேறு புதிய கதை என்னும் பட்சத்தில் மிஷ்கின் நடிக்க அதிக வாய்ப்புள்ளது.





