தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் பிரபுதேவா. நடன இயக்குனராக ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு நடனம் சொல்லிக் கொடுத்தார். பிறகு ஜெண்டில்மேன், சூரியன், வால்டர் வெற்றிவேல், பிரதாப் போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் தோன்றி நடனமாடி ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
அதன் பிறகு ஒரு கட்டத்தில் பிரபுதேவா நடிகராக தமிழ் சினிமாவில் அவதாரம் எடுத்தார். காதலன், லவ் பேர்ட்ஸ், ராசையா, உள்ளம் கொள்ளை போகுதே, காதலா காதலா, வானத்தை போல உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபுதேவா, அதன் பிறகு இயக்குனராகவும் மாறினார்.
நடிகர் விஜய் நடித்த போக்கிரி என்ற மெகா ஹிட் பிளாக் பஸ்டர் மூவியை தந்த இயக்கிய பிரபுதேவா, அடுத்து விஜயை வைத்து வில்லு என்ற படத்தையும் இயக்கினார். ஆனால் போக்கிரி அளவுக்கு வில்லு படம் போகவில்லை. பிறகு அக்சய் குமார் நடித்த ஒரு இந்தி படத்தை இயக்கி பிரபுதேவா வெற்றி பெற்றார்.
ஆரம்பத்தில் நடன இயக்குனராக, பிறகு நடிகராக, அதைத் தொடர்ந்து திரைப்பட இயக்குனராக தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கும் நடிகர் பிரபுதேவா, தொடர்ந்து படங்களில் நடிக்கவும் செய்கிறார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தின் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்த தி கோட் படத்தில் பிரபுதேவா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இயக்குனர் ராஜா சரவணன் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடிக்கும் சிங்காநல்லூர் சிக்னல் என்ற புதிய படம் கடந்த ஜூன் மாதம் படப்பிடிப்பு துவங்கியது. படப்பிடிப்பு துவக்க விழா பூஜை மிக பிரம்மாண்டமாக நடத்தினஅ. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய சில வாரங்களில் படப்பிடிப்பு அப்படியே நின்று விட்டது. இதற்கு காரணம் படப்பிடிப்புக்கான ஷெட்யூலை படத்தின் இயக்குனர் சரியாக திட்டமிடாமல் அடிக்கடி குளறுபடி செய்தார். இதனால் ஹீரோவாக நடிக்கும் பிரபுதேவா பயங்கரமாக அப்செட் ஆனார்.
நான் பல படங்களில் நடிக்க ஏற்கனவே கமிட்டாகி இருக்கிறேன். நீங்கள் சரியாக செட்யூல் போட்டு, படப்பிடிப்பை நடத்துங்கள். இப்படி குளறுபடி செய்தால் செட்யூல் சரியாக இல்லாவிட்டால், என்னால் தொடர்ந்து நடிக்க முடியாது என்று பிரபுதேவா இயக்குனரிடம் பலமுறை கூறியிருக்கிறார். ஆனால் இயக்குனர் ஷெட்யூலில் தொடர்ந்து குளறுபடி செய்ததால், வேறு படத்தில் நடிக்க பிரபுதேவா சென்றுவிட்டார். இதனால் சிங்காநல்லூர் சிக்னல் படம், பாதியில் நின்றுள்ளது. மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குமா, அப்படியே கிடப்பில் போடப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.





