- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனி 4 பேரும் ஒரே அறையில் ஒன்றாக வாழ்வது கடினம், அது நடக்க வாய்ப்பே இல்லை...

இனி 4 பேரும் ஒரே அறையில் ஒன்றாக வாழ்வது கடினம், அது நடக்க வாய்ப்பே இல்லை – மீண்டும் உறுதி செய்த நடிகர் ரவிமோகன்!

- Advertisement -

நடிகர் ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் தனது 2 பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இருவரும் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்த நிலையில் அந்த வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஏறக்குறைய 2 ஆண்டுகளாக தனது மனைவியை பிரிந்து ரவிமோகன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்த விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தனக்கு நேர்ந்த அவமானங்கள் கொடுமைகள் குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து ஆவேசமாக பேசினார். அப்போது தனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்தார். ஆனால் சில நாட்களுக்கு பிறகு மனம் மாறிய ரவி மோகன் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். காமெடி நடிகர் யோகிபாபுவை வைத்து அன் ஆர்டினரி மேன் என்ற படத்தையும் அவர் முதன்முறையாக டைரக்ட் செய்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் இன்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு தனது சமூக வலைதளத்தில் நடிகர் ரவிமோகன் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கு மிகவும் பிரியமான மக்களுக்கு இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள். உண்மையான நண்பர்களாக என் பக்கபலமாக நிற்பதற்கு நன்றி. சில நீதிமன்ற அவமதிப்பிற்கு இணையான வழிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருவது துரதிஷ்டவசமானது.

என்னை பொறுத்தவரை ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் உயிரோடு இருக்கும் வரை நாங்கள் நால்வரும் ஒரே அறையில் மீண்டும் ஒன்றாகவே இருக்கவே மாட்டோம். எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். உங்கள் நண்பர்களை கவனமாக தேர்ந்தெடுங்கள் என்று அந்த பதிவில் நடிகர் ரவிமோகன் கூறி இருக்கிறார். 4 பேர் என்று அவர் குறிப்பிடுவது தனது மனைவி பிள்ளைகளை என்பதால் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

இதற்கிடையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உற்சாக மிகுதியில் நடிகர் ரவி மோகன் நடனமாடும் ஒரு வீடியோவும் வைரலாகி வருகிறது. மேலும் தனது தந்தை தாய் அண்ணன் ஆகியோருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ள நடிகர் ரவி மோகன், நேற்று இரவு என் குடும்பத்தினருக்காக நான் இயக்குனராக அறிமுகமாகும் அன் ஆர்டினரி மேன் படத்தின் சில காட்சிகளையும் அதனை இசையையும் போட்டுக் காட்டினேன்.

என் குடும்பத்தினர் குறிப்பாக என்னுடைய அப்பா எனக்காக உற்சாகமாக கைதட்டிய அந்த தருணம் இந்த உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் பெற்றோர்களிடமிருந்து கிடைக்க வேண்டும் என்று நான் மனதார பிரார்த்திக்கிறேன் என்று அந்த பதிவில் நடிகர் ரவி மோகன் கூறியிருக்கிறார். அவரது இந்த வலைதள பதிவுகள் இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது.

- Advertisement -

சற்று முன்