- Advertisement -
Homeபொழுதுபோக்கு2031ம் ஆண்டில் எனக்கும் டிவிகேவுக்கும் தான் போட்டியே - தேர்தல் பிரசார மேடைகளில் பேசுவதற்கு இப்போதே...

2031ம் ஆண்டில் எனக்கும் டிவிகேவுக்கும் தான் போட்டியே – தேர்தல் பிரசார மேடைகளில் பேசுவதற்கு இப்போதே தயாராகும் நடிகர் தனுஷ்?

- Advertisement -

தமிழ்நாட்டில் கடந்தாண்டு திமுக ஆட்சி நடந்த போது, எதிர்கட்சி வரிசையில் அதிமுக தான் இருந்தது. மேலும் பாஜக காங்கிரஸ் பாமக தேமுதிக இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விசிக நாதக என பல கட்சிகள் இருந்த நிலையில் திடீரென தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவங்கி அரசியல் களத்தில் குதித்தவர் நடிகர் விஜய்.

அப்போது ஆளுங்கட்சியாக இருந்த திமுகவுக்கும் தவெக கட்சிக்கும்தான் தேர்தலில் போட்டியே என்று மேடைகளில் விஜய் தொடர்ந்து பேசினார். திமுகவுக்கு போட்டியாக அதிமுக பாஜக காங்கிரஸ் என பாரம்பரிய கட்சிகள் இருந்தும் தவெக கட்சியை அவர் முன்னிலைப்படுத்தியது மக்கள் மனங்களில் திமுகவுக்கு எதிரியாக தன்னை முன்நிறுத்தும் ஒரு சைக்கலாஜிக்கல் டெக்னிக்கல் என்பது அப்போது யாருக்கும் தெரியவில்லை.

- Advertisement -

ஆனால் அந்த உளவியல் ரீதியான யுக்தியில் விஜயின் நோக்கம் வெற்றி பெற்றது. திமுக வேண்டாம் அதிமுக வேண்டாம் என்று கருதிய 3ல் 1 பங்கு மக்கள் அதாவது 1.70 கோடி பேர் தவெகவுக்கு ஆதரவு தந்து விஜயை 108 இடங்களில் வெற்றி பெறச் செய்தனர். இது விஜய்க்கு கிடைத்த வெற்றி என்பதை விட பலமுறை ஆட்சி செய்த திமுக, அதிமுக மீது மக்களுக்கு இருந்த ஏமாற்றமும் விரக்தியும்தான் முக்கிய காரணமாகும்.

இந்த சூழலில் இப்போது சில நடிகர்களுக்கு அரசியல் ஆசை கொழுந்து விட்டு எரிகிறது. குறிப்பாக நடிகர் தனுஷ் இதில் மிகவும் முனைப்பாக இருந்து வருகிறார். அவர் அரசியலுக்கு வருவதற்கான ஆரம்ப அறிகுறிகள் இப்போதே தெரிந்து விட்டன. வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம். எப்படியும் மோதி பார்த்துவிடுவோம் என்று சமீபத்தில் நடந்த அவரது பிறந்த நாள் விழாவில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

நடிகர் விஜயை பொருத்த வரை மாற்றம் வேண்டும் என்று கருதிய தமிழக மக்களின் ஆதரவால் முதல்வராகி விட்டார். ஆனால் அவரது தரப்பில் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளும் மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களும் இந்த 5 ஆண்டில் நிறைவேற்றப்பட்டாமல் மட்டுமே மக்கள் மீண்டும் விஜய்க்கு வாய்ப்பளிக்க முன்வருவார்கள். ஒருவேளை ரீல்ஸ்சை மட்டுமே விஜய் இனியும் நம்பினால் ரியலில் அவர் மீண்டும் ஒருமுறை சிஎம் ஆக முடியாது.

இந்த சூழலில் தனது ரசிகர் மன்ற கொடியை பிரபலப்படுத்திய நடிகர் தனுஷ், அடுத்தக்கட்டமாக 40 மாவட்டங்களிலும் தனது ரசிகர் மன்றத்தின் மாவட்ட தலைவர்களை செயலாளர்களை நியமித்த நடிகர் தனுஷ், தொகுதி வாரியாக உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும் உத்தரவிட்டுள்ளார். எப்படியும் 2031ல் தவெக எதிர்கொள்ளும் போட்டியாளராக தனுஷ் களத்தில் நிற்பது உறுதியாகி விட்டது. அதனால் எனக்கும் தவெகவுக்கும் தான் போட்டியே என்ற டயலாக்கை அப்போது நடிகர் தனுஷ் ஆவேசமாக பேசவும் வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்