- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்போ அந்த படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆகாதா? தர்மன் படப்பிடிப்பும் நிறுத்தப்படுகிறதா? - தயாரிப்பாளர் சங்கம்...

அப்போ அந்த படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆகாதா? தர்மன் படப்பிடிப்பும் நிறுத்தப்படுகிறதா? – தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பால் குழப்பத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் புதிய படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆன பிறகு 4 வாரங்கள் அதாவது சரியாக 28 நாட்களுக்கு பிறகு அந்த படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. இதை 8 வாரங்களுக்கு பிறகு என மாற்ற வேண்டும் என்று திரைப்பட வினியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் கூறி வருகின்றனர்.

அப்படி 8 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிட ஓடிடி நிறுவனங்கள் சம்மதிக்காது. மேலும் பெரிய விலை கொடுத்தும் படங்களை வாங்காது என்பதால் தயாரிப்பாளர்கள் பலத்த நஷ்டத்தை சந்திக்க நேரிடும். அதே நேரத்தில் 4 வாரங்களில் ஓடிடிக்கு புதிய படம் வந்து விடும் என்பதால் தியேட்டர்களுக்கு படம் பார்க்க ரசிகர்கள் கூட்டம் வருவதில்லை.

- Advertisement -

அதனால் வினியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் கணிசமான லாபம் இழக்கின்றனர். இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் புதிய படங்கள் 4 வாரங்களில் ஓடிடி ரிலீஸ் என்ற நிலையிலும் அதை 8 வாரங்களாக மாற்ற வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் வினியோகஸ்தர்களும் தரப்பில் பஞ்சாயத்து நீடிக்கிறது.

மேலும் 8 வாரம் கழித்தே ஓடிடி ரிலீஸ் என தயாரிப்பாளர் தரப்பில் கடிதம் கொடுத்தால் மட்டுமே படத்தை தியேட்டரில் வெளியிடுவோம் என்றும் திரைப்பட வினியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்கள் நெருக்கடி தந்துள்ளது. இப்போது இந்த விவகாரத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் இணைந்து அதிரடி முடிவை அறிவித்துள்ளது.

- Advertisement -

அதன்படி வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை. படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும். படங்களுக்கான போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகளும் நடக்காது என அறிவித்துள்ளது. இப்போது ரஜினிகாந்த் நடிப்பில் தர்மன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. அதே போல் சிம்பு நடிக்கும் அரசன் படப்பிடிப்பும் நடக்கிறது.

மேலும் வரும் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் சிக்மா டிமாண்டி காலனி 3 ராவடி மண்டாடி சர்தார் 2 ஜெயிலர் 2 உள்ளிட்ட பல படங்கள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படி புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்று தயாரிப்பாளர் சங்கங்கள் தரப்பில் அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை தந்துள்ளது. படப்பிடிப்பும் நடக்காது, புதிய படங்களும் ரிலீஸ் இல்லை என்ற நிலையில் இது தமிழ் சினிமாவுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்