- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்த் பாராட்டிய சூப்பர் படம்; அந்த படத்தில் சசிக்குமாருக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது ஆர்ஜே...

ரஜினிகாந்த் பாராட்டிய சூப்பர் படம்; அந்த படத்தில் சசிக்குமாருக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது ஆர்ஜே பாலாஜியா? – இப்போ வருத்தப்படறீங்களே ப்ரோ?

- Advertisement -

வாய்ப்பு ஒருமுறை தான் கதவை தட்டும் என்பார்கள். அந்த நேரத்தில் தயாராக இருந்து அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டால் அடுத்தடுத்த நகர்வுகளில் வெற்றிகளை பெறலாம். ஒருவேளை வாய்ப்பை தவறவிட்டு விட்டால் பிறகு அடுத்த வாய்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும். இப்படி தேடி வந்த நல்ல வாய்ப்புகளை தவற விட்ட நடிகர்கள் பலருண்டு.

இந்த விஷயத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு, இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் போன்ற படங்களில் நடிக்க கமிட் ஆகி, பிறகு அந்த படங்களில் நடிக்காமல் வெளியேறி நல்ல வாய்ப்புகளை நழுவ விட்டார் நடிகர் சூர்யா. இப்போது கங்குவா படமும் தோல்வியை தந்துவிட்டது. அதனால் இப்போது இந்தியில் கர்ணா படத்திலும் நடிக்க முடியாமல் போய்விட்டது.

அதே போல் நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இப்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கலைஞராக இருக்கிறார். ரேடியோ ஜாக்கியாக மக்கள் மத்தியில் பிரபலமான அவர், கிரிக்கெட் வர்ணனையாளராகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்.

துவக்கத்தில் தேவி, கவலை வேண்டாம், நானும் ரௌடிதான் போன்ற படங்களில் காமெடி ரோல்களில் நடித்தார். பிறகு 2019ம் ஆண்டில் எல்கேஜி என்ற படத்தின் மூலம் நாயகனாக மாறினார். வீட்ல விசேஷம், மூக்குத்தி அம்மன், சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிமானத்தை பெற்றுள்ளார்.

இதையடுத்து ஆர்ஜே பாலாஜி நடிப்பில் சொர்க்கவாசல் என்ற படம் வருகிற 29ம் தேதி ரிலீஸாக உள்ளது. அத்துடன் நடிகர் சூர்யா நடிக்கும் 45வது படத்தையும் அவர் இயக்க உள்ளார். இந்த சூழலில் சொர்க்கவாசல் படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ஒரு முக்கியமான விஷயத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

நடிகர் சசிக்குமார் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற படம் அயோத்தி. இந்த படத்தை ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டியிருந்தார். இந்த படத்தில் நடிக்க முதலில், அயோத்தி பட இயக்குனர் ஆர்ஜே பாலாஜியை கேட்டுள்ளார். ஆனால் அப்போது சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. அதை நினைத்து இன்றுவரை வருத்தப்படுவதாக ஆர்ஜே பாலாஜி கூறியிருக்கிறார்.

சற்று முன்