- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யாவுடன் இணையும் விஜய் பட நாயகி... ரசிகர்களுக்கு செம விருந்து கொடுக்க காத்திருக்கும் கார்த்திக் சுப்புராஜ்...

சூர்யாவுடன் இணையும் விஜய் பட நாயகி… ரசிகர்களுக்கு செம விருந்து கொடுக்க காத்திருக்கும் கார்த்திக் சுப்புராஜ்…

- Advertisement -

பீட்சா திரைப்படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை வெற்றிகரமாக தொடங்கினார் கார்த்திக் சுப்புராஜ். அதற்கு முன்பாக அவர் சின்னத்திரையில் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அதில் சிறப்பான குறும்படங்களை இயக்கி, நடுவர்களின் பாராட்டைப் பெற்ற கார்த்திக் சுப்புராஜ் அங்கிருந்து வெள்ளி திரைக்கு நகர்ந்தார்.

 

- Advertisement -

கார்த்திக் சுப்புராஜின் திரையுலக பயணத்தில் மிக முக்கியமான திரைப்படம் ஜிகர்தண்டா. இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு கேங்ஸ்டர் மூவி. ஒரு ரவுடி திரைப்படம் என்றால் அது இப்படி தான் இருக்க வேண்டும் என்று பலரும் கூறும் வகையில் இருந்தது ஜிகர்தண்டா.

 

- Advertisement -

அதுவும் முதல் பாதியில் மிகவும் ராவாக கதையை நகர்த்தி நம்மை அசர வைத்திருப்பார் இயக்குனர். ஜிகர்தண்டா திரைப்படத்தை பார்த்துவிட்டு, பாபி சிம்ஹா கதாபாத்திரத்திற்கு தன்னை ஏன் அழைக்கவில்லை என்று கார்த்திக் சுப்புராஜிடம் ரஜினிகாந்த் கேட்டிருக்கிறார். அந்த அளவுக்கு, அசால்ட் சேது கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து இறைவி, மெர்குரி உள்ளிட்ட திரைப்படங்களை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார். ஆனால் இவை கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியடைந்தன. இதன் பிறகு, ரஜினியை வைத்து பேட்ட திரைப்படத்தை இயக்கினார் கார்த்திக் சுப்புராஜ். ரஜினிகாந்தின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக அது அமைந்தது.

 

உண்மையிலேயே ஒரு ரசிகர் ரஜினியை வைத்து படத்தை எடுத்தால் எப்படி இருக்கும் என்பதற்கு பேட்ட படத்தின் முதல் பாதியை கூறலாம். அந்த அளவுக்கு அதில் ரஜினியின் மேனரிசம்களை காட்சிக்கு காட்சி விவரித்து இருப்பார். கடைசியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

 

விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக சூர்யாவை வைத்து படம் இயக்குகிறார். இதன் போஸ்டரிலேயே, love laughter war எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதில் மலையாள நடிகர், ஜோஜூ ஜார்ஜ் இணைந்துள்ளார். இந்நிலையில் சூர்யாவுக்கு ஜோடியாக, பூஜா ஹெக்டே இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பூஜா ஹெக்டே ஏற்கனவே விஜயுடன் பீஸ்ட் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -

சற்று முன்