- Advertisement -
Homeபொழுதுபோக்குஉனக்கு நடிக்கவே தெரியலே, டயலாக் பேசவே வரலே, நீ ரொம்ப உயரமா இருக்கறே? - ஷூட்டிங்...

உனக்கு நடிக்கவே தெரியலே, டயலாக் பேசவே வரலே, நீ ரொம்ப உயரமா இருக்கறே? – ஷூட்டிங் ஸ்பாட்டில் பல அவமானங்களை நேரடியாக சந்தித்த பிரபல பாலிவுட் நடிகர்!

- Advertisement -

ஒரு மனிதன் உழைப்பால் திறமையால் அதிர்ஷ்டத்தால் முன்னுக்கு வந்து விட்டால் புகழில் உச்சம் தொட்டு விட்டால் பெரிய பதவிகளுக்கு வந்து விட்டால் அவரை கொண்டாடுவார்கள். அவரிடம் ஆட்டோகிராப் வாங்குவார்கள். செல்ஃபி எடுத்துக் கொள்வார்கள். அவர்களது நட்பு வட்டத்தில் இருக்க விரும்புவார்கள்.

அதே மனிதன் ஆரம்ப காலத்தில் சமூகத்தில் அடையாளமற்று காணப்படும் போது யாரும் அவரை கண்டுகொள்ள மாட்டார்கள். அவருக்கு நெருக்கடியான நேரத்தில் அவரை அவமானப்படுத்தவும் தயங்க மாட்டார்கள். முகத்துக்கு நேராக விமர்சிக்கவும் செய்வார்கள். இதுதான் சினிமாவிலும் தொடர்ந்து நடந்து வருகிறது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் கூறியதாவது, படப்பிடிப்பு தளத்தில் நான் நிறைய முறை திட்டு வாங்கி இருக்கிறேன். ஆரம்பத்தில் எனக்கு எதுவும் தெரியாது. நடிப்பை பற்றி உனக்கு எதுவும் தெரியாது. நீ மிகவும் உயரமாக இருக்கிறாய். வீட்டுக்கு திரும்பிப் போய்விடு என்று சொல்வார்கள்.

அப்புறம் எனக்கு படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்ததும் அவர்கள் சரி சரி அங்கே நின்று டயலாக்கை சொல்லுங்க என்று சொல்வார்கள். அப்போது என்னிடம், இப்படியா டயலாக் சொல்வது? என்று கேட்டும் என்னை திட்டுவார்கள். என் டயலாக் தவறுகளை திருத்துவார்கள். அப்படி தான் சினிமாவில் மெதுவாக நான் முன்னேறினேன்.

- Advertisement -

பொதுவாக படப்பிடிப்புக்கு சரியான நேரத்திலேயே செல்ல நான் முயற்சிப்பேன். ஒருமுறை நான் தாமதமாக ஒரு படப்பிடிப்புக்கு சென்றேன். அப்போது படப்பிடிப்பு தளத்துக்கு வெளியே அந்த படத்தின் இயக்குனர் நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் என்னிடம் சொந்தமாக கார் இல்லாமல் வேறொருவரின் காரில் தான் நான் அங்கு சென்று இருந்தேன்.

நான் அங்கு சென்றதும் என்னை பார்த்த இயக்குனர், படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறினார். இங்கிருந்து கிளம்பு என்று சொல்லி என்னை உடனே அங்கிருந்து செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டார் என்று நடிகர் அமிதாப் பச்சன் ஒரு சினிமா நடிகராக தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் முன்பு பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்