குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத்குமார் தனது 64வது படத்தில் நடிக்க உள்ளார். மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் நடிக்கும் இந்த படத்துக்கு டேர் டெவில் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஷாலினி அஜீத்குமார் தான் இந்த படத்தை தயாரிக்கிறார்.
நடிகர் அஜீத்குமாரை பொருத்த வரை ஒரு படத்தில் நடிக்க ரூ. 185 கோடி சம்பளம் கேட்கிறார். ஆனால் அவருக்கு ரூ. 110 கோடி வரை சம்பளம் தர தயாரிப்பாளர்கள் முன்வருகின்றனர். ஏனெனில் அஜீத்குமாரின் சினிமா வியாபாரமே ரூ. 175 கோடி என்றுதான் சொல்லப்படுகிறது. மேலும் ஆந்திரா கர்நாடகா கேரளா போன்ற மாநிலங்களில் அவருக்கு பெரிய அளவில் பிசினஸ் இல்லை.
ஆனாலும் அவர் பிடிவாதமாக சம்பளம் குறைக்காத நிலையில் தயாரிப்பாளர்களே யாரும் வரவில்லை. இதையடுத்து கடைசியாக ரூ. 150 கோடி வரை அஜீத்குமார் சம்பளத்தை குறைத்த போதிலும் தயாரிப்பாளர்கள் யாரும் அவரை வைத்து படம் தயாரிக்க ஓகே சொல்லாத நிலையில்தான் அவரே தனது 64வது படத்தை தயாரிக்க முடிவெடுத்தார்.
இந்த சூழலில் டேர் டெவில் படத்தில் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பதாக தகவல் வெளியானது. அவர் ஏற்கனவே தமிழில் பல படங்களில் நடித்தவர். குறிப்பாக உன்னைப் போல் ஒருவன் ஜெயிலர் ஜில்லா சிறைச்சாலை இருவர் காப்பான் போன்ற படங்களில் நடித்து தமிழ் பட ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்.
மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க மோகன்லால் ரூ. 40 கோடி வரை சம்பளம் பெறுவதாக சொல்லப்படுகிறது. மலையாளத்தில் மிக அதிக சம்பளம் வாங்கும் ஹீரோ நடிகர் மோகன்லால் தான். இந்த நிலையில் டேர் டெவில் படத்தில் நடிக்க அவருக்கு ரூ. 15 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. கால்ஷீட் நாட்கள் குறைவுதான் என்றாலும் இந்த குறைந்த சம்பளத்தில் நடிக்க அவர் விரும்பவில்லை.
மேலும் மலையாள படங்களை காட்டிலும் தமிழ் சினிமாவில் வியாபாரம் அதிகம், படத்தின் பட்ஜெட்டும் அதிகம் என்ற நிலையில் தனது சம்பளத்தில் பாதிக்கும் குறைவாக பேரம் பேசப்பட்டதால் அப்செட் ஆன நடிகர் மோகன்லால் அஜீத்குமார் படத்தில் நடிக்க விரும்பாமல் வெளியேறி விட்டார் என்ற லேட்டஸ்ட் தகவல் இப்போது வெளியாகி உள்ளது.





