தமிழ் சினிமாவில் இளம் நாயகனாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. அவரது முதல் படம் ஜெயம் என்பதால் அதுவே அவரது பெயரில் முன்னால் அடையாளமாகி இருந்தது. ஆனால் கடந்த ஆண்டில் தனது பெயர் இனி ஜெயம் ரவி அல்ல, ரவி மோகன் என்று அவரே மாற்றி அறிவித்தார். மோகன் என்பது அவரது தந்தையின் பெயர்தான்.
சினிமாவில் ஹீரோவாக பல வெற்றிப் படங்களை தந்தவர் நடிகர் ரவிமோகன். இப்போது திரைப்பட தயாரிப்பாளராக மாறிவிட்டார். மேலும் நடிகர் யோகிபாபு நடிக்கும் இன் ஆர்டினரி மேன் என்ற படத்தையும் அவர் டைரக்ட் செய்கிறார். அதனால் நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் என 3 விதமான பரிமாணங்களில் நடிகர் ரவி மோகன் அசத்தி வருகிறார்.
ரவிமோகன் ஸ்டுடியோஸ் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் முதன் முறையாக அவர் தயாரிக்கும் படத்தின் பெயர் ப்ரோ கோடு என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அது பிரபல மதுபான வகையின் பிராண்டு பெயர் என்பதால் அந்த டைட்டிலில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் படத்துக்கு ப்ரோ கிளப் என டைட்டில் மாற்றப்பட்டு விட்டது.
இப்போது ப்ரோ கிளப் படத்தில் நடிகர் ரவிமோகன் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். இயக்குனர் ரா கார்த்திக் இந்த படத்தை டைரக்ட் செய்கிறார். ப்ரோ கிளப் படத்தில் எஸ்ஜே சூர்யா அர்ஜூன் அசோகன் ஸ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்துக்கு இப்போது புதிதாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்த படத்தை வருகிற அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்வதாக கூறி ஒப்பந்தம் செய்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விலை பேசி விற்றுள்ளனர். ஆனால் இந்த படம் இன்னும் படப்பிடிப்பு நிறைய உள்ளதால் அதற்குள் படத்தை எடுத்து முடித்து ரிலீஸ் செய்ய முடியாது.
அதனால் அடுத்த ஆண்டு ஜனவரிக்கு இந்த படம் தள்ளிப் போகும் பட்சத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பேசிய விலையில் 20 சதவீதம் குறைக்கப்படும். இன்னும் ஏப்ரல் மே மாதம் என படம் ரிலீஸ் தள்ளிப் போகும் மேலும் 20 சதவீதம் விலையில் குறைக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இதற்கு பெனால்டி கிளாஸ் என்று சொல்கின்றனர். அதனால் ஓடிடி விலையில் 20 சதவீதமா 40 சதவீதமா இழப்பு எவ்வளவு என்ற நெருக்கடியில் தயாரிப்பாளர் ரவிமோகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.





