- Advertisement -
Homeபொழுதுபோக்குபகிரங்கமாக மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண்குமார், எங்கப்பா மாதிரிதானே நீங்களும் ஏமாந்து இருப்பீங்க? என்றும் ஆதங்கம்!

பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண்குமார், எங்கப்பா மாதிரிதானே நீங்களும் ஏமாந்து இருப்பீங்க? என்றும் ஆதங்கம்!

- Advertisement -

பண்ணையாரும் பத்மினியும் சித்தா ஆகிய படங்களின் மூலம் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் அருண்குமார். இந்த படங்களின் கதை திரைக்கதை வெகு யதார்த்தமானதாக இருந்தது ரசிகர்களின் மனதில் நின்றது. காரை மையப்படுத்திய முதல் படமும், சிறுமியர் பாலியல் தொல்லை குறித்து பேசிய சித்தா படமும் மனதை தொட்ட படங்களாக இருந்தன.

இந்த நிலையில் அடுத்து இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் உருவான படம் வீரதீர சூரன். நடிகர் சியான் விக்ரம் நடிகை துஷாரா விஜயன் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா மற்றும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்ராமூடு உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.

- Advertisement -

இன்று 27ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட இந்த படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவில்லை. இந்த படத்தின் ஓடிடி உரிமம் பெற்ற பி4யு என்ற தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு காரணமாக இந்த படத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் 4 வாரங்களுக்கு ரிலீஸ் செய்யக் கூடாது என்ற தடையை விதித்தது. இதனால் படம் திரைக்கு வராமல் ரசிகர்கள் பலத்த ஏமாற்றம் அடைந்தனர்.

ஓடிடி உரிமம் பெற்ற தயாரிப்பு நிறுவனம், ஓடிடி நிறுவனத்துக்கு படத்தை விலை பேசி வியாபாரம் முடிவதற்கு முன்பே படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டதாக அந்த நிறுவனம் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், படம் வெளியாவது தாமதமானது. இப்போது அந்த வழக்கில் இருந்த சிக்கல்கள் எல்லாம் நீக்கப்பட்டு வீரதீர சூரன் படம் திரைக்கு வருவது உறுதியாகி விட்டது.

- Advertisement -

இந்நிலையில் படத்தின் இயக்குனர் அருண்குமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது, வீர தீர சூரன் இன்று மாலை முதல் தியேட்டர்களில் வெளியாகிறது. எங்க அப்பா காலையில் 3 முறை இந்த படத்துக்கு டிக்கெட் வாங்க போய் படம் வெளியாகவில்லை என்று பலத்த ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டார்.

அதே மாதிரி விக்ரம் ரசிகர்களும் பொதுமக்களும் எவ்வளவு இன்னல்களை சந்தித்து இருப்பார்கள் என்பது எனக்கு புரிகிறது. எல்லோருக்கும் படக்குழு சார்பாக உளமாற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த பிரச்சனையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்கள் தியேட்டர் அதிபர்கள் மற்றும் எனது திரையுலக நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி என்று அந்த வீடியோவில் இயக்குனர் அருண்குமார் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்