- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக சட்டசபையில் இடம் மாறி அமர்வதால் எதிர்மறை விமர்சனங்களை சந்திக்கும் முதல்வர் விஜய் - வொய்...

தமிழக சட்டசபையில் இடம் மாறி அமர்வதால் எதிர்மறை விமர்சனங்களை சந்திக்கும் முதல்வர் விஜய் – வொய் ப்ரோ வெரி ராங்க் ப்ரோ!

- Advertisement -

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பொறுப்பேற்று பதவிக்கு வந்து 100 நாட்களை கடந்து விட்டார். ஆனாலும் அவர் மீதான எதிர்மறையான விமர்சனங்களும் சர்ச்சைகளும் தொடர்ந்து வலுத்து வருகிறது. குறிப்பாக 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, திமுக கூட்டணி எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்து செயல்பட்டு வருகிறது.

அப்படிப்பட்ட ஒரு சூழலில் சட்டசபையில் எதிர்கட்சி வரிசையில் உள்ள திமுகவையும் அதன் மூத்த முன்னாள் அமைச்சர்களையும் ஏகவசனத்தில் தவெக அமைச்சர்கள் வசைபாடுவதும் பேசுவதும் சட்டசபை நிகழ்வுகளை நேரலையாக பார்க்கும் மக்களை கடும் எரிச்சலடைய வைக்கிறது. குறிப்பாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா ரமேஷ் ராஜ்மோகன் நிர்மல்குமார் வினோத் மரியவில்சன் போன்றவர்களின் குத்தலான பேச்சும் உடல்மொழியும் திமுக அதிமுகவினர் மட்டுமின்றி பொதுமக்களையும் கடுப்பேற்றி வருகிறது.

அத்துடன் துறை சார்ந்த எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாமல் அமைதி காக்கும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்லி ஆனந்த், இனிமேல் திமுக ஆட்சிக்கே வர முடியாது. இனி தவெக தான் எப்போதும் தமிழகத்தை ஆட்சி செய்யும். தமிழகத்தின் நிரந்தர முதல்வர் விஜய் தான் என்று ஆணவப் போக்கில் தலைக்கணமாக பேசுவது எல்லாம் மக்களுக்கு அதிர்ச்சியை தருகிறது.

இந்த சூழலில் முதல்வர் விஜய் சட்டசபையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட முதல்வர் இருக்கையில் அமராமல் நேற்று அமைச்சர் செங்கோட்டையன் அருகில் போய் அமர்ந்துக்கொண்டார். இன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அருகில் போய் அமர்ந்துக்கொண்டார். இது தற்போது பேசுபொருளாகி இணையத்தில் சர்ச்சையாகவும் கடும் விமர்சனமாகவும் மாறி வருகிறது.

முதல்வர் இருக்கைக்கு ஆசைப்படாதவர் விஜய் என்று இதற்கு தவெகவினர் முட்டு கொடுத்தாலும் நெட்டிசன்கள் இதை கடுமையாக விமர்சிக்கின்றனர். முதல்வர் இருக்கைக்கு தகுதியற்றவர் என்று விஜய் தெரிந்துக்கொண்டதால் அந்த இருக்கையில் அமர மறுக்கிறார். முதல்வர் இருக்கையில் அமர்ந்தால் பதில் சொல்ல வேண்டுமோ, என அச்சத்தில் அமைச்சர்களுக்கு நடுவில் வந்து அமர்ந்துக்கொள்கிறார் என்றும் விமர்சிக்கின்றனர்.

அவருக்கு மட்டுமே உரிய முதல்வர் இருக்கையில் அமராமல் தவிர்ப்பது அதை அவமதிப்பதற்கு சமம் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அமைச்சர்களுடன் ஒன்றாக அமர்ந்து சரிசமமான ஒருவராக தன்னை காட்டிக்கொள்ள இப்படி ஒரு பில்டப் செய்கிறார். மக்களிடம் டயலாக் பேசி ஏமாற்றியது போக இப்போது அதே வேலையை அமைச்சர்களிடம் காட்டுகிறாரா? ஒய் ப்ரோ வெரி ராங்க் ப்ரோ என்றும் கிண்டல் செய்கின்றனர். முதல்வர் விஜய் இடம் மாறி அமர்வது இப்போது பெரிய பேசுபொருளாக மாறிவிட்டது.

சற்று முன்