- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்தடுத்த பிரமோஷன் கிடைத்த மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் - பலத்த ஏமாற்றத்தில் ரசிகர்கள்

அடுத்தடுத்த பிரமோஷன் கிடைத்த மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் – பலத்த ஏமாற்றத்தில் ரசிகர்கள்

- Advertisement -

நடிகர், இயக்குநர், பாடகர், இசையமைப்பாளர், எழுத்தாளர், தயாரிப்பாளர், பேச்சாளர், லட்சிய திமுக தலைவர் என பன்முகத் தன்மை கொண்ட அஷ்டவதானி டி. ராஜேந்தரின் மகன் சிலம்பரசன். அப்பாவை போலவே மகனும் கலைத்துறையில் தனது தந்தையிடம் கற்ற வித்தகைளை காட்டி வருகிறார்.

எனினும் அவரை போல பல வெற்றிப்படங்களை சிலம்பரசனால் கொடுக்க முடியவில்லை. மன்மதன், கோவில், வல்லவன் போன்ற குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே அவருக்கு பெரிய அளவில் பேசப்பட்ட படங்களாக அமைந்தன. வெந்து தணிந்தது காடு , மாநாடு என சமீபத்தில் வந்த படங்களில் பேசப்பட்ட படங்களாக இருந்தது. ஈஸ்வரன், பத்துதல போன்ற படங்கள் சரியாக போகவில்லை.

- Advertisement -

இப்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் வரலாற்று பின்னணி கொண்ட படமாக, பாகுபலி போன்ற சரித்திர கால படமாக உருவாகிறது. இதற்காக செட் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

சிலம்பரசனை பொருத்தவரை நல்ல திறமையான நடிகராக இருந்தும், அவர் தொழில் தீவிர அக்கறை, ஆர்வம் காட்டாதது குறிப்பாக ஷூட்டிங் போகாமல் இருப்பது, காதல் விவகாரங்களில் அடிக்கடி சிக்கிக்கொள்வது அவரது முன்னேற்றத்துக்கு பெரிய பின்னடைவாக இருந்து வருகிறது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதலில் காதலித்தது சிம்புவைதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

டி ராஜேந்தருக்கு சிலம்பரசனுடன் குறளரசன் என்ற மகனும், இலக்கியா என்ற மகளும் உள்ளனர். சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். சிம்புவின் தம்பி குறளரசன், கடந்த 2019ம் ஆண்டில் நபீலா அகமத் என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தம்பதிக்கு மகன் பிறந்திருக்கிறார்.

ஆனால் டி ராஜேந்தரின் மூத்த மகன் சிம்புவுக்கு, 40 வயது கடந்த நிலையில் இன்னும் திருமணமாகவில்லை. தங்கைக்கு மகன் பிறந்ததால், சிம்பு தாய்மாமன் ஆனார். தம்பிக்கு மகன் பிறந்ததால் சிம்பு, பெரியப்பா ஆனார். இப்படி அடுத்தடுத்த கிடைத்த தாய்மாமன், பெரியப்பா பிரமோசன்களால் சிம்பு உற்சாகமடைந்துள்ளார். ஆனால் சிம்பு 40 வயது கடந்தும் இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பது அவரது ரசிகர்களை பலத்த ஏமாற்றத்தில் இருக்கச் செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்