- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயலலிதா அம்மா என்னை பார்த்து கேட்ட அந்த கேள்வி, கன்னத்தில் அறைவது போல இருந்தது -...

ஜெயலலிதா அம்மா என்னை பார்த்து கேட்ட அந்த கேள்வி, கன்னத்தில் அறைவது போல இருந்தது – காமெடி நடிகர் வையாபுரி ஓபன்டாக்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி ரோலில் நடித்தவர் வையாபுரி. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய காமெடி நடிகர் வையாபுரி கூறியதாவது, எனக்கு திருமணம் முடிவான நிலையில், நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பத்திரிக்கை கொடுக்க சென்றேன். ஒருநாள் சாயங்காலம் 7 மணிக்கு அவரை சந்திக்க அப்பாயின்மென்ட் கிடைத்தது. நானும் அந்த நேரத்திற்கு சென்று அவரைக் காண உட்காந்திருந்தேன்.

அப்போது அங்குள்ள கதவு திறக்க உள்ளே இருந்து அம்மன் வருவது போல ஜெயலலிதா அம்மா வந்தார்.என்னைப் பார்த்து வாங்க வையாபுரி எப்படி இருக்கீங்க எனக் கேட்டார். உட்காருங்க என உபசரித்து என்ன விசேஷம், கல்யாணமா என கேட்டார்.நானும் ஆமாம் அம்மா என சொல்லி பத்திரிக்கையை எடுத்துக் கொடுத்தேன். பத்திரிக்கையைப் பார்த்து விட்டு என்னை பார்த்தார்கள்.

- Advertisement -

பின் என்னிடம் உங்களுக்கு அப்பா அம்மா இருக்காங்களா என கேட்டார். அப்பா இல்லம்மா, அம்மா மட்டும் இருக்காங்க என சொன்னேன். தொடர்ந்து சொந்த பந்தங்கள் எல்லாம் இருக்கிறார்களா என கேட்டார். எல்லாருமே இருக்காங்கம்மா என நான் சொல்ல, இந்த பத்திரிக்கையில் உங்க பெயர், மணப்பெண் பெயர், இடம், நேரம் என இதுமட்டும் தானே இருக்கிறது. வேறு எதுவுமே இல்லையே என்றார்.

நான் அதற்கு, இந்த பத்திரிக்கை நண்பர்களுக்கு வழங்குவதற்கு என தெரிவித்தேன். அப்படியா என யோசித்தவர், நண்பர்களுக்கு உங்கள் அப்பா, அம்மா பெயர், குலதெய்வம் பெயரெல்லாம் தெரிந்தால் நீங்கள் அசிங்கமாக உணர்வீர்களா என கேட்டார். எனக்கு அப்படியெ ஒருமாதிரி ஆகிவிட்டது. வேதம்புதிது படத்தில் ஒரு சிறுவன் சத்யராஜிடம் பாலு என்பது உங்க பெயர், தேவர் என்பது நீங்க படிச்சு வாங்கிய பட்டமா என கேட்கும்போது ஒரு நிலைமை காட்டப்படுமே அந்த மாதிரி பளார் என அறைந்த மாதிரி இருந்தது.

- Advertisement -

இனிமேல் வீட்டில் நிறைய விசேஷங்கள் வரும். என்ன வந்தாலும் குலதெய்வம் மற்றும் வீட்டில் பெரியவர்கள் பெயர் கண்டிப்பாக அழைப்பிதழில் இருக்க வேண்டும். அவங்க ஆசீர்வாதம் தான் எப்பவும் உங்களுக்கு இருக்கும் என ஜெயலலிதா சொன்னார். இதற்கிடையில் வெளியில் நிறைய பேர் உங்களைப் பார்க்க காத்திருக்கிறார்கள் என சொல்ல, அவர்களை நான் எப்போதும் பார்க்கிறேன். உங்களை எப்போதாவது தான் பார்க்க முடிகிறது என என்னிடம் பேசினார்.

இது என் வாழ்க்கையில் மறக்கவே முடியாதது. அதன்பின்னர் இன்று வரை என் வாழ்க்கையில் என்ன விசேஷம் வந்தாலும் ஜெயலலிதா அம்மா அவர்கள் சொன்னது போல குலதெய்வம், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பெயரைப் போட்டு தான் பத்திரிக்கை அடிக்கிறேன் என்று நடிகர் வையாபுரி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்