திரிஷா இல்லேன்னா நயன்தாரா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படத்தில் ஜீவி பிரகாஷ்குமார் நாயகனாக நடித்திருந்தார். இதில் ஆனந்தி மனிஷா யாதவ் மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். கடந்த 2015ம் ஆண்டில் இந்த படம் வெளியானது.
இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறாத நிலையில், அடுத்ததாக நடிகர் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார். டிரிப்பிள் ஏ என அழைக்கப்பட்ட இந்த படமும் பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் சொதப்பியது.
டிரிப்பிள் ஏ படத்தை இயக்கிய போது, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நாயகனாக நடித்த நடிகர் சிம்புவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மோதல் ஏற்பட்டது. அதனால் ஒரு கேரக்டரை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் அந்த படத்தை வெளியிட்டதாக ஒருமுறை ஆதிக் ரவிச்சந்திரனே ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறியிருந்தார்.
இப்போது சிம்பு நடிக்காத டிரிப்பிள் ஏ கேரக்டரை தான் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், குட் பேட் அக்லி படத்தில் நடிகர் அஜீத்குமாரின் அக்லி கேரக்டரில் புகுத்தியிருப்பதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. அதாவது சிம்பு நடிக்காத கேரக்டரில் குட் பேட் அக்லி படத்தில் 3 கேரக்டரில் ஒரு கேரக்டரில் அஜீத்குமார் நடித்தது உறுதியாகி உள்ளது.
திரிஷா இல்லேன்னா நயன்தாரா டிரிப்பிள் ஏ படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடித்த மார்க் ஆண்டனி படம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு மிகப்பெரிய வெற்றியை வரவேற்பை பெற்றுத் தந்தது. அந்த படத்தின் மாஸ் ஹிட்டுக்கு பிறகுதான், அஜீத்குமார் தனது படத்தை இயக்கும் வாய்ப்பை ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கொடுத்தார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறுகையில், மார்க் ஆண்டனி படத்தில் ஒரு பாடலை டி ராஜேந்தர் பாடி இருக்கிறார். அவரிடம் முதலில் நாங்க நேரில் போய் நீங்க ஒரு பாட்டு பாடணும் என்று கேட்டோம். அவரும் உடனே ஓகே சொல்லிட்டார். இத்தனைக்கும் எனக்கும் நடிகர் விஷாலுக்கும் அவரது மகன் சிம்பு கூட கருத்து வேறுபாடு இருக்குன்னு தெரிந்தும் அதை பத்தி எல்லாம் எதையும் யோசிக்காமல் அவர் பாடி கொடுத்தார், என்று ஆதிக் ரவிச்சந்திரன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





