- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த இசையமைப்பாளரோட மருமகள் நான், என் முன்னாள் கணவர் இப்பவும் என் பிரண்ட்...

அந்த இசையமைப்பாளரோட மருமகள் நான், என் முன்னாள் கணவர் இப்பவும் என் பிரண்ட் தான் – தூரல் நின்னு போச்சு பட நாயகி சுலக்சனா சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கி ஹீரோவாக நடித்த தூரல் நின்னு போச்சு படத்தை இப்போதும் கூட காட்சிக்கு காட்சி ரசித்து பார்க்கலாம். அதில் நாயகியாக மங்களம் கேரக்டரில் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சுலக்சனா. அதன்பிறகு ஏராளமான படங்களில் அவர் நடித்திருக்கிறார். 1990களில் பல படங்களில் அம்மா கேரக்டரிலும் சுலக்சனா நடித்திருந்தார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை சுலச்சனா கூறியதாவது, கதாநாயகியாக பெரிய புகழுடன் இருந்த 18 வயசுல எனக்குக் கல்யாணம் முடிவாகிடுச்சு. மறைந்த இசையமைப்பாளர் எம்எஸ்விஸ்வநாதன் மகன் கோபி கிருஷ்ணன் என் முன்னாள் கணவர். திடீர் என்று திருமணம் ஆகி விட்டது. கல்யாணத்துக்குப் பிறகுதான் எனக்கு சினிமா வாய்ப்புகள் அதிகமா வந்துச்சு.

- Advertisement -

ஆயிரம் நிலவே வா கெட்டிமேளம் குவா குவா வாத்துகள் ஜனவரி 1 ராஜாத்தி ரோஜாக்கிளின்னு நிறைய ஹிட் படங்களில் அப்போ ஹீரோயினாக நடிச்சேன். கேபாலசந்தர் சாரின் சிந்து பைரவி படத்துக்குப் பிறகுதான் நல்ல ஆர்ட்டிஸ்ட்டுன்னு எனக்குப் பெயர் கிடைச்சுது. கருத்து வேறுபாடு காரணமாக என் கல்யாண வாழ்க்கை விவாகரத்தில் முடிஞ்சது.

எதிர்பார்ப்பு பொய்த்துப் போய் வாழ்க்கை கஷ்டமானது. அதுக்காக வருத்தப்பட்டாலும், அத்துடன் வாழ்க்கை முடிஞ்சுபோச்சா என்ன? சவாலா இருந்தாலும், சிங்கிள் பேரன்ட் வாழ்க்கையைத் தைரியமா எதிர்கொண்டு வாழ்ந்தேன். குழந்தைப் பருவத்துல இருந்து நடிச்சிட்டு வந்த நான் என் தனிப்பட்ட அமைதி மற்றும் என் குழந்தைகளுக்கு முழுமையா நேரம் ஒதுக்க, சினிமா துறையிலிருந்து 9 ஆண்டுகள் விலகியிருந்தேன்.

- Advertisement -

வருத்தமும் விரோதமும் இல்லாம பிரிஞ்சதால இப்போது வரை நானும் என் முன்னாள் கணவரும் நண்பர்களாக தான் இருக்கிறோம். சினிமா சின்னத்திரையில நடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுச்சு. என் ரெண்டு பசங்களையும் நல்லா படிக்க வெச்சு நல்ல நிலைக்கு ஆளாக்கினேன். காலம் உங்க குணத்தை மட்டும் மாத்தவேயில்லை’ன்னு பலரும் சொல்வாங்க.

வெகுளித்தனமான குணம் கொண்ட நான் எந்த விஷயத்தையும் ரொம்ப யோசிக்க மாட்டேன். அதனால எனக்கான வளர்ச்சியும் புகழும் குறைவாக இருக்கலாம். ஆனா, இப்படி இருக்கவே விரும்புறேன். இதனால்தான் எனக்கு மன அமைதி கிடைக்குது என்று அந்த நேர்காணலில் நடிகை சுலக்சனா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்