- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்த நிகழும் சோகம் - பழம்பெரும் நடிகர் மகன் திடீர் மறைவு

தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்த நிகழும் சோகம் – பழம்பெரும் நடிகர் மகன் திடீர் மறைவு

- Advertisement -

தமிழ் சினிமாவில் நல்ல நல்ல படங்கள் வந்து வெற்றியடையும்போது அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகையர், இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் சந்தோஷமடைகின்றனர். சினிமா என்பதே ஒரு கேளிக்கை நிறைந்த பண்டிகையாக கொண்டாடப்பட்டாலும், அதில் கலைஞர்களின் மறைவு என்பது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

நடப்பாண்டில், தொடர்ந்து வரிசையாக தமிழ் சினிமாவை சேர்ந்த பல கலைஞர்களின் மறைவு, சினிமாத் துறையினருக்கு பலத்த வேதனையை தந்து வருகிறது. குறிப்பாக மாரிமுத்து, மனோபாலா மறைவு, நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை, கலை இயக்குநர் மிலன் மறைவு போன்ற விஷயங்கள் பெரிய அளவில் வலியை கொடுத்தது.

அந்த வகையில், இப்போது ஜூனியர் பாலையா இன்று காலை மறைந்து விட்டார். பழம்பெரும் நடிகர் பாலையாவின் மூன்றாவது மகன் இவர். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ரகு என்றாலும், இவரது முகம், உடல் அமைப்பு, பாவனை, குரல்வளம் என அனைத்துமே அவரது தந்தை பாலையா போலவே இருந்ததால், ஜூனியர் பாலையா என்றே பெயரில் தமிழ் சினிமாவில் நிலைத்து விட்டது.

கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம், சாட்டை, வேட்டிய மடிச்சுக்கட்டு உள்ளிட்ட பல படங்களில் இவரது நடிப்பு பிரமாதமாக இருக்கும். குறிப்பாக சாட்டை படத்தில், பள்ளி தலைமை ஆசிரியராக ஒரு பண்பட்ட நடிப்பை ஜூனியர் பாலையா தந்திருந்தார். பல படங்களில், ஹீரோவுடன் இருக்கும் நண்பர் குழுவில் ஜூனியர் பாலையா இருப்பார்.

அவரது அப்பா பாலையாவை போலவே, இவரது நடிப்பும் மிக யதார்த்தமாக தெளிவாக இருக்கும். குரலிலும் ஒரு உற்சாகம் இருக்கும். இவரை தனது படங்களில் டைரக்டர் பாக்யராஜ் நன்றாக பயன்படுத்திக் கொண்டார். பெரிய அளவில் ஜூனியர் பாலையா பேசப்படாவிட்டாலும், நல்ல நடிகராக தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். கும்கி படத்தில் ஊர் தலைவர்களில் ஒருவராக நடித்திருப்பார்.

கடைசியாக, என்னாங்கடா உங்க சட்டம் என்ற படத்தில்,. கடந்த 2021ல் நடித்த ஜூனியர் பாலையாவுக்கு 70 வயது ஆகிறது. இன்று காலை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்த போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட உயிர் பிரிந்துள்ளது. அவரது உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள், திரையுலகம் சார்ந்தவர்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சற்று முன்