- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த நடிகையின் காலில் விழுந்து வணங்க ஆசைப்பட்டேன் - 100வது நாள் விழா மேடையில் வெளிப்படையாக...

அந்த நடிகையின் காலில் விழுந்து வணங்க ஆசைப்பட்டேன் – 100வது நாள் விழா மேடையில் வெளிப்படையாக பேசிய அன்றைய முதல்வர் எம்ஜிஆர்!

- Advertisement -

புரட்சித் தலைவர் மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் சின்னவர் என்று தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டவர் எம்ஜிஆர். தனது அண்ணன் சக்கரபாணி மற்றும் சில மூத்த படத் தயாரிப்பாளர்களின் காலில் விழுந்து அவர் வணங்கி உள்ளார். ஆனால் அவரே ஒரு நடிகையின் காலில் விழுந்து வணங்க நினைத்திருக்கிறார். அதை அவரே வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்.

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் அலைகள் ஓய்வதில்லை. இந்த படத்தில் தான் நடிகர் கார்த்திக் நடிகை ராதா அறிமுகம் ஆனார்கள். மேலும் இந்த படத்தில் தியாகராஜன் சில்க் ஸ்மிதா கமலா காமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்னர். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

எம்ஜிஆர் திரைத்துறை சார்ந்தவர் என்பதால் முதல்வராக இருந்தாலும் இதுபோன்ற விழாக்களில் நேரம் இருந்தால் கட்டாயம் கலந்துக்கொள்வார். குறிப்பாக கே பாக்யராஜ் பாரதிராஜா போன்றவர்களின் படங்கள் அப்போது பெரிய அளவில் வெற்றிப் படங்களாக இருந்ததால் 16 வயதினிலே அலைகள் ஓய்வதில்லை கிழக்கே போகும் ரயில் முந்தானை முடிச்சு என பல பட விழாக்களில் எம்ஜிஆர் கலந்துக்கொண்டு இருக்கிறார்.

அலைகள் ஓய்வதில்லை படத்தின் 100வது நாள் விழா நடந்தது. அந்த விழாவில் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். அந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் இயக்குனர் ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட கலைஞர்களுக்கு கேடயம் வழங்கினார்.

- Advertisement -

பின்னர் எம்ஜிஆர் மேடையில் பேசும்போது பாரதிராஜாவையும் படத்தையும் பாராட்டி பேசினார். அதன்பிறகு இந்த படத்தில் கார்த்திக்கின் அம்மாவாக நடித்திருப்பவர் பிரமாதமாக நடித்திருந்தார். படத்திலேயே அவருடைய நடிப்புதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அவர் உண்மையிலேயே வயதானவராக இருப்பார், அவர் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் அவரோ இளமையான பெண்ணாக இருக்கிறார். அதனால் அவரை இருகரம் கூப்பி வணங்குகிறேன் என்று பேசினார். விழா முடிந்ததும் கமலா காமேஷை தனது காரில் அவரது வீடு வரை அழைத்துச் சென்று எம்ஜிஆர் மரியாதை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்