கூலி படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் வருகிற அக்டோபர் மாதம் 15ம் தேதி உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் டைரக்ட் செய்திருக்கிறார்.
இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் எஸ்ஜே சூர்யா விஜய் சேதுபதி இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மலையாள நடிகர் மோகன்லால் கன்னட நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்து உள்ளார். ஜெயிலர் படத்தை போலவே ஜெயிலர் 2 படமும் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் 2 படம் ரிலீஸ் ஆக இன்னும் 35 நாட்களாக உள்ள நிலையில் இந்த படத்தின் வியாபாரத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் துவங்கி விட்டது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தெலுங்கு வெர்ஷனில் இந்த படத்தை வெளியிட ஜிஎஸ்டி பிரண்டட் செலவுகள் உட்பட ரூ. 70 கோடி ரூபாய் சன் பிக்சர்ஸ் விலை வைத்துள்ளது.
இந்த 70 கோடி ரூபாய் முதலீட்டை திரும்ப பெற வேண்டும் என்றால் அந்த படம் ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் 200 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் என்பதால் இந்த படத்தை வாங்க முன்னணி வினியோகஸ்தர் யாரும் முன்வராமல் பின்வாங்கி விட்டனர்.
அதே போல் கேரளாவில் ஜெயிலர் 2 படத்தை ரூ. 20 கோடி விலைக்கு வியாபாரம் பேசியுள்ளனர். ஆனால் கடந்த முறை கூலி படம் மிகப்பெரிய பிளாப் ஆன நிலையில் அந்த படமே பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது. அதனால் 20 கோடி ரூபாய் விலை கொடுத்து ஜெயிலர் 2 படத்தை வாங்கி மலையாள பட வினியோகஸ்தர்களும் அதிக ஆர்வம் காட்டவில்லை.
ஆனால் சொன்ன விலைக்கு விருப்பம் இருந்தால் வாங்குங்க, இல்லை என்றால் போயிட்டே இருங்க என்ற ஒரு கட் அண்ட் ரைட் பாணியில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வியாபாரம் பேசி வருகிறது. இது படத்தின் மீதான அதீத நம்பிக்கையாக இருந்தாலும் படத்தை ரிஸ்க் எடுத்து அதிக விலைக்கு வாங்க வினியோகஸ்தர்கள் யாரும் தயாராக இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாக உள்ளது.





